மாவட்ட மட்டத்தில் நடைபெற்று முடிந்த கிராம அலுவலர் சேவை ஊடாக நிறைவேற்ற எதிர்பார்க்கும் மக்கள் சேவைகளை சிறந்த முறையில் முறையில் ஆற்றுவதற்கும் மற்றும் கிராம அலுவலகங்களின் தரத்தினை மேம்படுத்துவதனையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மாவட்ட மட்ட உத்தியோகத்தர் அலுவலக முகாமைத்துவ போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட மட்ட விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.03.2022 )பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் நாம் பொதுமக்களுக்காக சரியான முறையில் செயற்பட்டு, மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு வழங்குகின்ற சேவைகளை உரிய வகையில் வழங்கி மக்களை திருப்திப்படுத்தி செயற்படுவதுடன் இலக்கினை தவறாது பொதுமக்களுடன் இசைந்து கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.மேலும்,அலுவலகங்களை சரியான முறையில் பேணுவதுடன் பொதுமக்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களுடனும் இடையேயான உறவு முறையை சரியாக பேணி திறமைகளை நாளாந்தம் வளப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மத்தியஸ்த திறமைகள் மற்றும் உபாய மார்க்கங்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம்(09.03.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9மணிக்கு இடம்பெற்றது.
குறித்த பயிற்சி நெறியில் மத்தியஸ்த சபையில் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பிணக்குகளை தவிர்க்க அல்லது குறைக்கும் நோக்கில் இப்பாரிய பொறுப்பை மேற்கொண்டுவரும் மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் இருதரப்பு நியாயங்களையும் சீர்தூக்கி நடுநிலை வகித்து கடமையாற்றுவதற்காக இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் எல்லோரும் இணைந்த வகையில் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டுமென தெரிவித்தார்.
மேலும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய காணி மத்தியஸ்த சபைக்குரிய பொதுவான இடம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

" நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் கருப்பொருளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு "பெண் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும்" நிகழ்வு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 08.03.2022 ன்று காலை மு.ப 9.30 க்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கக்சுயின் ஜப்பான் பல்கலைக்கழக முன்னாள் ஆய்வுநிலைப் பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும்,சிறப்பு விருந்தினராக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சிவராணி நிக்கொலஸ்பிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் பயன்பாட்டுக்குரிய மக்கள் மயப்படுத்தப்பட்ட சவுக்கு மரக்காடாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டதுடன், மக்களினால் அமைக்கப்பட்ட குறித்த மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் மயப்படுத்தப்பட்ட வனவள கிராமமாக பிரகடனம் செய்வதன் மூலம், சவுக்கு மரக்காட்டினை மக்கள் பராமரிக்கமுடிவதுடன் மக்கள் தமது வாழ்வாதார செயற்பாடுகளையும் மேற்கொள்ள கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. மேலும்,மணல் அகழ்வு இடம்பெறாத வகையில் மக்கள் இக்காட்டினை பராமரிக்க வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் அவசியம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் சிறு தொழில் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் வியாபார பெயர் பதிவு நடவடிக்கைகளின் போது மாவட்ட ரீதியில் பொதுமக்களிடமிருந்து பொதுவான ஆவணங்களை கோருதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 03.02.2022 முற்பகல் 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி திணைக்கள தலைவர், பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.