யாழ்ப்பாண மாவட்டத்தில் Fair Med நிறுவனத்தின் அனுசரணையில் "மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களை வலுப்படுத்துதல் தொடர்பான வைகறை நிகழ்ச்சித்திட்டத்தினை யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 19.04.2022 காலை ஒன்பது மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்களை இனங்கண்டு வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தை ஆறு வருடங்களுக்கு யாழ். மாவட்டத்தில் செயற்படுத்தவுள்ளதோடு, இச் செயற்திட்டம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள், முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான நியமனம் இன்றையதினம் (2022.04.18) வழங்கிவைக்கப்பட்டது.
இந் நியமனம் வழங்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.முரளிதரன், பிரதம கணக்காளர் திரு.என். சிவரூபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன், பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, காணிப்பதிவாளர் திருமதி.எஸ்.குணாஜினி, மாவட்ட பதிவாளர் திருமதி.த.ஆர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட விஷேட பொருளாதார மத்திய நிலையத்தின் குழுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் 08.04.2022 காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்ட விஷேட பொருளாதார மத்திய நிலையத்தினை சிறந்தவகையில் செயற்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அந் நிலையத்தின் விற்பனையாளர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், யாழ்ப்பாண விஷேட பொருளாதார மத்திய நிலையத்தின் அடிப்படைவசதிகள், விளம்பரப்படுத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் 08.04.2022 காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மட்ட மகளிர் விவகார சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் 07.04.2022 காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதம கணக்காளர் திரு.என்.எஸ்.ஆர்.சிவரூபன் மற்றும் கணக்காளர் திரு.இ.முருகதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டதோடு, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.