யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக கட்டடங்களை நிர்மாணிப்பது தொடர்பான முதன்மைத்திட்டம் (Master Plan) தயாரிப்பதற்கான முன்னேற்றக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (2022.05.09) அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி),பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதிப் பதிவாளர் நாயகம், உள்ளக கணக்காய்வாளர், மோட்டார் திணைக்கள உதவி ஆணையாளர், மாவட்டச் செயலக பொறியியலாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் YOULEAD நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் அனுசரனையுடன் தொழிலுக்கான வழிகாட்டல் செயலமர்வு யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களப்பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களின் தலைமையில் (05.05.2022) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
2021,2022 அரச துறையில் நியமனம் பெற்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வானது மனிதவலு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பங்குபற்றலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமை விடயப்பகிர்வு வழங்குவதற்கு ஏதுவாக இச் செயலமர்வானது இரு அமர்வுகளாக இடம் பெற்றன. முதல் அமர்வில் 68 உத்தியோகத்தர்களும், இரண்டாம் அமர்வில் 46 உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் SIYB நிறுவனமும் இணைந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறையில் "தொழில் ஆரம்பித்தலும் மேம்படுத்தலும்" தொடர்பான பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திரு.ஆர்.ஜெயல்ட் அந்தோனி (SIYB) அவர்களின் தலைமையில் (30.04.2022) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.என்.சிவரூபன் அவர்களும், சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.வ.குமாரதீபன் (யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும், மற்றும் கௌரவ விருந்தினராக திரு.கு.கௌதமன்( யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களும் திரு.A.ஆரியசுதன் (SIYB), திரு.கே.கருணாகரன் (மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம், யாழ்.மாவட்டச் செயலகம்), மற்றும் உறுப்பினர்கள் (SIYB) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையும் இணைந்து நடாத்திய "மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் ஒன்று கூடல் விழா" மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் பேரவையின் தலைவர் சுப்பையா பரம்சோதி அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை (03.05.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதியோர்களை முன்னிலைப்படுத்தி முதியோர்நடனம், முதியோர் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு பரசில்களும், அன்பளிப்புக்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களினால் வழங்கப்பட்டன.
அத்துடன் யாழ் மாவட்ட 15 பிரதேச செயலகங்களிலிருந்தும் வறுமைக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஸ்ட பிரஜை ஒருவர் தெரிவு செய்யப்பட்டு 2500/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

சிறுவர் தங்குமிட விடுதிகள் மற்றும் சிறுவர் இல்ல பணியாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 29.04.2022 காலை ஒன்பது மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் நான்கு சிறுவர் தங்குமிட விடுதிகள் கலந்துகொண்டன. இதில் சிறுவர் தங்குமிட விடுதிகள் மற்றும் சிறுவர் இல்ல பணியாளர்கள் அர்ப்பணிப்பான செயற்திறன்மிக்க சேவைகளை வழங்கவேண்டுமென குறிப்பிடப்பட்டது.
மேலும், இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், உளவளத்துணை நிபுணர் Dr.திரு.எஸ்.சிவதாஸ், உள சமூக பணியாளர் திரு.வாகீசன், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் திரு.பா.கோபி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.இ.செந்தூரன், சிறுவர் நன்நடத்தை திணைக்களம் (தலைமைப்பீடம்)திரு.ஆர்.ராஜன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.