யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ள பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
அரச திணைக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அவ்அவ் திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.இதுவரை இவ் எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினரால் "சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு போதைப்பொருள் சவாலை கட்டுப்படுத்தல்" எனும் கருப்பொருளில் போதைப் பொருட்பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துணை சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட உடனடி இலவச அழைப்பினை அறிமுகப்படுத்துதல் மற்றும் பேருந்துகளில் ஸ்டிக்கர்ஸ் காட்சிப்படுத்துதல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 27.06.2022 காலை 9.30 மணிக்கு யாழ்.பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ் முரளிதரன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை மாவட்ட இணைப்பாளர், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், மாவட்ட/ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்விற்குஅரச சார்பற்ற நிறுவனங்களான வேல்ட்விசன் மற்றும் சாந்தீகம் ஆகியன அனுசரணை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் (21.06.2022) காலை 11.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி), அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் தற்போது யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிப்படைந்த மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படவுள்ள சேவைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உள்ள தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் (21.06.2022) காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் வட மாகாண சிரேஷ்ட முகாமையாளர் சந்தியா மானகே, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் சிவராம் மற்றும் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணைப்பாளர், மனித வள வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணைப்பாளர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் 20.06.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதி விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் Gama sanga pilisandorak programme செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்திய திட்டங்கள், முடிக்கப்படாத திட்டங்கள், கிராம அபிவிருத்தித்திட்டங்கள்,சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார நிலைமைகள் , வாழ்வாதார திட்டங்கள்,அதற்கான நிதித்தேவைகள், வீட்டுத்தோட்ட விதைகள் மற்றும் நாற்று விநியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன





