யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சுற்றாடல் பிரிவின் ஏற்பாட்டில் சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினம் தொடர்பான முக்கியத்துவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வும், சிரமதானம் மற்றும் மரநடுகை மேற்கொள்ளும் நிகழ்வும் (02.0f9.2022) காலை 8.00 மணிக்கு யா /புனித மரியாள் வித்தியாலயத்தில்(OLR) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாவட்ட செயலக சுற்றாடல் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விது நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வழங்குதல் தொடர்பில் வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களை விழிப்புணர்வூட்டுதல் தொடர்பான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 02.09.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. அதன்பொருட்டு விது நம்பிக்கை நிதியத்தின் மூலம் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இவ் அடையாளச் சின்னத்தை செவிப்புலன் வலுவற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களில் பொருத்துவதற்கான நோக்கமானது போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்களுக்கும், சாரதிகளுக்கும் விழிப்புணர்வூட்டுவதற்காகவாகும். இவ் விழிப்புணர்வு நடவடிக்கை முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதோடு, ஏனைய மாவட்டங்களிலும் அறிகப்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு் விழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (30.08.2022) மாலை 3.00மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் கடந்த கூட்ட தீர்மானங்களின் இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக விழாவுக்கான மலர் வெளியீடு, மலருக்கான பெயர் தெரிவு, அதற்கான ஆக்கங்கள் கோரல், விழாவுக்கான குழுக்களை தீர்மானித்தல், நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்பு, நிதித்தேவைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட பண்பாட்டு பேரவை உப செயலாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட பண்பாட்டு பேரவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

விவசாயத் திட்டங்கள் குறித்த களப்பார்வை மற்றும் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 01.09.2022 பிற்பகல் 2.00 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் அரசின் விவசாய கொள்கைகளை அடைவதற்காக வட மாகாண சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்களைக் கொண்டு விவசாயத்திட்டங்களை ஊக்குவித்தல் மற்றும் அதன் செயற்பாடுகளை வினைத்திறனாக செய்வதனூடாக உணவுப்பாதுகாப்பை துரிதப்படு்தலை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் விவசாயத்துறை ஊடாக உணவுப்பாதுகாப்பை துரிதப்படுத்தல், ASMP திட்டங்கள், யாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயத் துறை அபிவிருத்தித் திட்டங்கள், FAO திட்டங்கள், மாவட்டத்தில் மேலதிகமாக மற்றும் பற்றாக்குறையாக காணப்படும் பொருட்களை உற்பத்தி செய்தல், கிராமிய வீட்டுத் தோட்டத்திட்டங்களை துரிதப்படுத்தல், சேதனப்பசளை உற்பத்தி, பிள்ளைகளுக்கான போசாக்கினை அதிகரி்க்கச் செய்வதற்கான நடவடிக்கைகள், புகையிரதத்திணைக்களத்தின் பாவனைக்கு உட்படுத்தாத நிலத்தை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், பாடசாலைகள் , கோயில்கள், தேவாலயங்கள் , வீடுகளில் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுதல் என்பன தொடர்பாக முன்வைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் விவசாயத் திட்டங்களை பட்டதாரிப்பயிலுனர்கள் சிறப்பாகச் செய்வதற்காக அவர்களுக்கு வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இலத்திரனியல் பெறுகை செயலகத்தின் ஏற்பாட்டில் Electronic Government Procurement தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 26.08.2022 காலை ஒன்பது மணிக்கு மாவட்டச் செயலக கணனிக்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்டச் செயலக பொறியியலாளர், பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.