யாழ்.மாவட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம் (16.08.2022 ) யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரின் இணைத்தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி),மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர், இ.போ.ச பிராந்திய முகாமையாளர், திணைக்கள தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், உள்ளிட்ட துறைசார் தரப்பினர் கலந்து கொண்டனர்.

வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மாவட்ட செயலக விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பழமரக்கன்றுகள் நாட்டப்படும் நிகழ்வு (10.08.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி கணக்காளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரசநிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மாவட்ட செயலக விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய மரக்கறி நாற்றுகள் நாட்டப்பட்டு அதன் அறுவடை நிகழ்வு (09.08.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வி்ல் கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் குறித்த மரக்கறி உற்பத்தி நடவடிக்கைளை விரிவுபடுத்தும் ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு நடாத்தும் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (10.08.2022) காலை 9.30 மணிக்கு யாழ்.சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர் திருமதி அன்ரன் யோகநாயகம் எழிலரசி, மாநகரசபை ஆணையாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன் மற்றும் கௌரவ விருந்தினராக தொழிற்துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உதவிப்பணிப்பாளர் தனஞ்சயன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும் இந் நிகழ்வில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், முயற்சியாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 04.08.2022 காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் புகையிரதத்திணைக்களத்தின் பாவனைக்கு உட்படுத்தாத நிலத்தை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், பாடசாலைகள் , கோயில்கள், தேவாலயங்கள் , வீடுகளில் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் பால் , முட்டை என்பவற்றுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள், சிறு போக மற்றும் பெரும்போக விவசாயத்திற்கான விதைகள், பசளைகள், கிருமிநாசினி ஆகியவற்றை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள், வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான எரிபொருள் உடனடித்தேவையை உறுதிப்படுத்தல், விதை நெல் தேவைப்பாடு மற்றும் விதை நெல் விலையை தீர்மானித்தல் ,தென்னை மரத்தை தாக்கும் பீடை கொல்லி மருந்தின் தட்டுப்பாடு , தென்னந்தொழிற்சாலை உற்பத்திகளை ஊக்குவித்தல் , மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் ஆகியன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.