மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பான குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (16.09.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), காணிப் பயன்பாட்டு திட்டமிடல் அலுவலக உதவிப் பணிப்பாளர், மாவட்டசெயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மற்றும் திணைக்களங்களின் துறைசார் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்.மாவட்ட செயலக அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 16.09.2022 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபெற முடியும். இவ் விளையாட்டு போட்டி மூலம் உத்தியோகத்தர்களின் திறமைகளை இனங்காணல், உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல் மற்றும் உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர தொடர்புகளை உருவாக்குதல் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.முரளிதரன் , மாவட்ட செயலக கணக்காளரும் நலன் புரி சங்க தலைவருமான அ. நிர்மல் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலக கிளைத்தலைவர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மேற்கொள்ளப்படும் செலவீனங்களை சிபார்சு செய்தல், அனுமதியளித்தல், அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான மென்பொதி தொடர்பான அறிமுக நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 13.09.2022 காலை 8.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், எதிர்காலத்தில் இம் மென்பொதி ஊடாக நிதி நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
2002 ஆம் ஆண்டு 24ம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டம் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 14.09.2022 யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் அறிவித்தலுக்கு அமைவாக நலன்புரி அனுகூலங்கள் பெறும் பொதுமக்ககளை அடையாளம் காண்பதற்கு விண்ணப்பங்களை QR CODE மூலம் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக இணைய வழி ஊடாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் நலன்புரி நன்மைகள் சபை ஆணையாளர் பீ.விஜயரத்ன இணையவழி மூலம் கலந்துகொண்டார். மேலும், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், துறை சார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு யுனிலிவர் நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய "சன்லைட் மனுதம் வியமன" திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 முயற்சியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். அவற்றுள் இரண்டு முயற்சியாளர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரினால் இருபதாயிரம் ரூபா காசோலைகள் இன்று(12.09.2022) அரச அதிபர் அலுவலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், நான்கு முயற்சியாளர்களுக்கும் அவர்களுடைய பிரதேச செயலகங்களில் இருபதாயிரம் ரூபா காசோலைகள் வழங்கிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இதில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.





