யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் (10.10.2022) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக நலன்புரிச்சங்க தலைவரும் கணக்காளருமான திரு. அ. நிர்மல் தலைமையில் இன்று (04) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொண்டதோடு, நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இயந்திரமயமான இந்த வாழ்க்கைக்கு இவ்வாறான ஆன்மிக செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகும் என்றும்,
நவராத்திரி பூஜையின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகனினால் வாழ்க்கையின் தத்துவங்கள், பெண்களின் சிறப்பு குறித்து சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக்கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 30.09.2022 காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றமையினால் அதனைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மாவட்ட, பிரதேச ,கிராம மட்டங்களில் குழுக்களை நியமித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கழிவகற்றல் முகாமைத்துவத்தினை வினைத்திறனாக மேற்கொள்வதன் ஊடாக டெங்கை கடடுப்படுத்தல், பராமரிக்கப்படாத காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைளுக்கு உட்படுத்தல், பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் சவால்கள், டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை பிரகடனப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தல், டெங்கு கட்டுப்பாடு தொடர்பான முப்படையினரின் பங்களிப்பு, அதிகூடிய டெங்கு பரவும் இடங்களை தெரிவு செய்து நேரடிக்கண்காணிப்பில் கூட்டுப்பங்களிப்புடன் ஈடுபடுதல்,டெங்கு கட்டுப்பாடு தொடர்டபான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் 30.09.2022 பி.ப 12.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அத்தோடு, நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான விழிப்புணர்வூட்டல், பிரதேச மட்டங்களில் விண்ணப்பங்களை தரவுத்தளங்களில் பதிவு செய்தல், மக்களுக்கு நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பான செய்தி சென்றடைந்தமையை உறுதிப்படுத்துதல், தகுதியான நபர்களை கண்டறியும் செயற்திட்டம் தொடர்பில் வினைத்திறனான தகவல்களை பெற்றுக்கொள்ளுதல் என்பன தொடர்பாக ஆராயப்பட்டன.
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் "வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வு" சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.பி.பிரதீபன் தலைமையில் 29.09.2022 யாழ். மாவட்டத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் திரு.சமன் ஹன்டரகம அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமூக பாதுகாப்பு சபையின் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ்.பி.களுஆராச்சி மற்றும் பிரதி முகாமையாளர் திரு. எஸ்.டபுள்யு.லக்ஸ்மன் ஆகியோரும், மற்றும் விருந்தினர்களாக மேம்பாட்டு முகாமையாளர் திரு.டி.எஸ்.லக்மல், சிரேஷ்ட இணைப்பாளர் ரஞ்சித் தேஸநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.





