நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (31.10.2022)காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந் நடமாடும் சேவையில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் 2.3 மில்லியன் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இக் கொடுப்பனவு போரினால் பாதிக்கப்பட்டவர்கள் , இறப்பு மற்றும் காயம் அடைந்தவர்கள், சொத்திழப்படைந்த அரசாங்க ஊழியர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக 23 நபர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு 55 பேர் வருகை தந்ததுடன் 37 பேர் தங்கள் கோவைகளைப் பூரணப்படுத்தி அடுத்த கட்ட இழப்பீடுகளுக்கான கொடுப்பனவு பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (30.10.2022) பிற்பகல் 3 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இம் முன்னாயத்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, மேலதிக செயலாளர் சமன் குமாரி, மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் கே.கமலரூபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சத்தியமூர்த்தி மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
குறித்த நடமாடும் சேவை நாளைய தினம் (31.10.2022) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது

2023 ஆம் ஆண்டுக்குரிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் (20.10.2022) வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் பொருளாதார மட்டத்தில் நலிவடைந்த குடும்பங்கள் மற்றும் அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சித்திட்டங்களை Fairmed நிறுவனம் முன்னெடுத்துவரும் நிலையில் அடுத்து வரும் இரண்டு வருட காலத்திற்கு மேற்கொள்ளப்படவேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், Fairmed நிறுவன தேசிய இணைப்பாளர்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்

சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுதாய மட்ட தலைவர்களுக்கான மாவட்ட மட்ட கலந்துரையாடல் (28.10.2022) காலை 9.00 மணி முதல் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளின் பங்களிப்பு, சமுர்த்தி கொடுப்பனவுகள், சமுர்த்தி வங்கிகளை இணையவழி நிகழ்நிலை வங்கிகளாக (Online system) மாற்றுதல், பிரதேச மட்டங்களிலும் பயிற்சி நெறிகளை நடத்துதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், Samurthi e-collector எனும் செயலியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 31.10.2022 திங்கட்கிழமை காலை 8.30 மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
 
குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்ற உள்ளன.
 
1நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு
2.பாதுகாப்பு அமைச்சு
3.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
4.பதிவாளர் நாயகம் திணைக்களம்
5.ஆட்பதிவு திணைக்களம்
6.குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம்
7.இழப்பீட்டுக்கான அலுவலகம்
8.காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
9.மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்