USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (22.11.2022) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையில் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களை தெரிவுசெய்து அவர்களுக்கான உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் இக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் அசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும்போது "சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குதல், பயிற்சிகளை வழங்குதல், முயற்சியாளர்களின் தேவைகளை அறிந்து வளவாளர்கள் மற்றும் அனுசரனையாளர்களின் பங்களிப்புடன் செயலமர்வுகளை கூடுதலாக நடாத்துவதன் ஊடாக வளப்படுத்தமுடியும்" எனவும் கூறினாா்.





