கைத்தொழில் அபிவிருத்தி சபையின் செழிப்பான தேசத்தை உருவாக்குவதற்கு தயார்ப்படுத்தலும் ஆரம்பித்தலும் என்னும் தேசிய நிகழ்ச்சித்திட்ட முன்வைத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (21.12.2022) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்வைத்தல் கைத்தொழில் அபிவிருத்தி சபை தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும அவர்களால் முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கைத்தொழில் அபிவிருத்தி சபை பணிப்பாளர் நாயகம், பிராந்திய அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர், சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளர், வட மாகாணப் பணிப்பளர், யாழ் மாவட்ட உதவிப்பணிப்பளர், கைத்தொழில் அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள் , உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கைத்தொழில் துறை சார்ந்த நிறுவனத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக சங்க தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமைக்கான கௌரவிப்புவிழா யாழ் மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. அ. நிர்மல் அவர்களின் தலைமையில் இன்று 21.12.2022 காலை 11.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 2020 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அரச திணைக்களுக்கிடையிலான தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் பங்குபற்றி யாழ் மாவட்ட செயலகம் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமையை முன்னிட்டு இந்த தருணத்தை கொண்டாடும் முகமாக இந் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அர்ப்பணிப்பான வினைத்திறன் மற்றும் விளைதிறனான செயற்பாட்டாலும், மக்களுக்கு வழங்கிய உன்னதமான சேவையினாலும் இந்த வெற்றி கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 16.12.2022 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சண்டிலிப்பாய், கோப்பாய்,வேலணை,ஊர்காவற்துறைமருதங்கேணி, சங்கானை ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கி காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அனுமதி பெறப்படவேண்டிய விடயங்கள், காணிக்கச்சேரி மூலம் காணி வழங்க அனுமதி கோரல்,பிரதேச சபைக்கு பாரதீனப்படுத்தும் காணிகள் தொடர்பானவை, அரச காணிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் குடியிருப்பதற்கான காணி வழங்கல், குறுங்கால, நீண்ட கால குத்தகையில் காணி வழங்கல், கடலட்டை வளர்ப்பதற்கும், கடற்கொட்டகை அமைக்கவும் விண்ணப்பித்த நபர்களிற்கு வருடாந்த அனுமதிப்பத்திரம் ஊடாக வழங்க சிபாரிசு கோரல், யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு விசேட அளிப்பு மூலம் காணி வழங்கல், காணியை கையளித்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு திணைக்களங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகமும் தேசிய உற்பத்தித்திறன் செயலகமும் இணைந்து உற்பத்தித்திறன் சான்றிதழ் கற்கைநெறியை வழங்கியதோடு, இக் கற்கை நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.12.2022) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு மேலதிக அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும்போது "உற்பத்தித் திறனை அலுவலகத்தில் நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் பொதுமக்கள் சேவையை திருப்திகரமானதாக உறுதிப்படுத்தும் பொருட்டு ஆகும். அதற்கேற்ப பெரும்பாலான அரச நிறுவனங்கள் பொதுமக்கள் சேவையை திருப்திகரமாக மேற்கொள்கின்றன. தற்போது பயிற்சிகளை பெற்ற நீங்களும் அரச நிறுவனங்களில் பயனுறுதி மிக்க பொதுமக்கள் சேவைகளை வழங்குதல் வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 16.12.2022 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
அரசசார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி , நலனோன்புத்திட்டங்கள், கல்வி ,சுகாதாரம், சூழல் , பெண்கள், சிறுவர்கள் போன்ற பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ் அரசசார்பற்ற நிறுவனங்களின் கடந்த கால 2022 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள், 2023 ஆம் ஆண்டுக்கான எதிர்கால திட்டங்கள், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், இதர பங்காளர்களின் பங்களிப்பு , பிரதேச மட்டத்தில் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் தொடர்பாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு இக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.