யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட 31 நபர்களிற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் பிறப்பு பதிவு செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (11.01.2023) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா அவர்களின் விரைவான நடவடிக்கையின் கீழ் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட முப்பத்தொரு நபர்களிற்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது.
.அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தினம் மற்றும் தைப்பொங்கல் நிகழ்வுகளின் முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (10.01.2023) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறிப்பாக 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் ஆலய உட்புறத்தில் பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்படும் எனவும் தொடர்ந்து இசை ,நாதஸ்வர, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உரைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இப்பொங்கல் நிகழ்வு நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் கலாச்சாரத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்புடன் ஒழுங்கமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
B3S முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (09.01.2023) காலை 10:00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் B3S இன் நடைமுறை சிக்கல்கள் மற்றும் முன்னேற்றகரமான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆலோசனைகளும் கருத்துக்களும் zoom ஊடாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பதில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கும்போது "கடந்த ஐந்து வருடங்களாக B3S னை அதிக பயனாளா்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தி கூடுதலான பயன்களைப் பெற்றுள்ளதுடன், இந்த B3S காலத்து காலம் புதுப்பிக்கப்பட்டு தரவுகளை உள்வாங்கி தொடர்ச்சியாக பயன்படுத்தி பயன்பெறுதல் வேண்டும். அத்தோடு B3S மென்பொருளை பிரதேசமட்டங்களில் சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றியையும் தெரிவித்தார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களுக்கான உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (09.01.2023) காலை 9:30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் உலக உணவு திட்டம் மற்றும் வேர்ல்ட் விசனும் இணைந்து யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்த தெல்லிப்பழை, சங்கானை , வேலணை, மருதங்கேணி, நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களிலுள்ள நலிவடைந்த குடும்பங்களுக்கு உணவு பொருட்களை விநியோகிப்பதில் ஏற்படுகின்ற இடர்பாடுகள், குறிப்பாக விலை நிர்ணயம் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள், பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட விதம் தொடர்பாக கலந்துரையாப்பட்டன.
தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல் தொடர்பாக கௌரவ அமைச்சருடனான கலந்துரையாடல் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2023) காலை 10:30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் நடைபெறவுள்ள ( Glocal Fair - 2023) "வடக்கின் ஒளிமயம்" நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஆலோசனைகளையும் விழிப்புணர்வுகளையும் வழங்குவதற்காகவும், தொழில் தொடர்பான பிரச்சினைகள், EPF மற்றும் ETF பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாணும் நோக்கில் இந்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.





