சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான வைகறை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தலைமையில் (30.01.2023) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், 2023 ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களான மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி வழங்குதல் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்றவை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்வரும் மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வருடாந்த கச்சதீவு திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (27.01.2023) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் திருவிழாவுக்கான நிதித் தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு, பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பொலிஸ் பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஒலி, ஒளி வசதிகள், அலங்காரங்கள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், விருந்தினர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbach 24.01.2023 அன்று காலை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்

தனிப்பட்ட வருமான வரிக்கணக்கீட்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 26.01.2023 அன்று மாலை 2.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகிந்த குணரட்ண அவர்களும், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்ன அவர்களும் மரியாதை நிமித்தமாக நேற்று (19.01.2023 ) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்கள்





