கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA)யின் ஏற்பாட்டில் OCEAN CONSERVANCY மற்றும் EARTH LANKA YOUTH NETWORK அனுசரணையுடன் பூமி தினத்தை முன்னிட்டு கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வானது (24) குருநகரில் (வீட்டுத் திட்ட அடுக்குமாடி குடியிருப்பு முன்) நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பொதுமுகாமையாளர் (MEPA) ,உதவிமுகாமையாளர் (North East mepa), இராணுவ கட்டளைத்தளபதி, பிரதி பொலிஸ் அத்தியட்சகர், பிரதி ஆணையாளர்(Ceo), பிரதிஆணையாளர்(Jmc), பிரதம பொறியியலாளர் (Jmc), உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்(யாழ்ப்பாணம்), தலைவர்(Clean ocean force), தலைவர் (Earth lanka youth network) கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டு குழு கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் எதிர்நோக்கும் பால்நிலை சார் வன்முறைகளுக்கு எதிராக செயற்படுத்தும் வேலை திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன
குறிப்பாக பிரதேச செயலகங்களிலிருந்து பெண்கள் அபிவிருத்தி பிரிவினரால் கடந்த நான்கு ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள், அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற இடங்கள் , நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் பேசும் பெண் பொலீஸ் அலுவலர்களது தேவைப்பாடுகள்,SGBV சார் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான முற்காப்பு நடவடிக்கைககள் தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சியில் கலந்து கொண்ட தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் தலைமையில் (18.04.2023) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாகாண பணிப்பாளர் சி.சிவகங்காதரன், மாவட்ட உதவிப்பணிப்பாளர் சி.சசிகரன் ஆகியோரினால் ஒழுங்குப்படுத்தப்பட்ட இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்கஅதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், அவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
கைத்தொழில் அபிவிருத்திசபையின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் தொழில்முயற்சியாளர்களுக்கு பால் சார்ந்த உற்பத்தி பொருட்களை உருவாக்கல் மற்றும் பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றிலிருந்து நீரகற்றல் போன்ற தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகள் 81 முயற்சியாளர்ளுக்கு வழங்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலக வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரி கழக தலைவருமான அ.நிர்மல் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (26.04.2023) மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம் , கவிதை , நடனம் ,நாடகம், இசைநிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில், கா.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம் போன்ற பரீட்சைகளில் சித்திபெற்ற உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை கௌரவித்தல், ஓய்வு பெற்று சென்றோா், அரச சேவையில் வெள்ளி விழாவை பூர்த்தி செய்தோர், இடமாற்றம் பெற்று சென்றோா், போன்றோரை கௌரவித்தல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேர்ல்ட் விஷன் நிறுவனமும் இணைந்து நடாத்திய விஷேட தேவையுள்ள சிறுவர்களுக்கான அர்த்தமுள்ள குதூகலிப்பும் பிறந்த நாள் கொண்டாட்டமும் நிகழ்வு (11.04.2023) காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு உடல்ரீதியாக அங்கவீனமுற்ற விசேட மாணவர்களை மகிழ்வூட்டும் நோக்கில் சாவகச்சேரி, நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 100 மாணவர்களை உள்ளடக்கியதாக நடைபெற்றதுடன் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
வளவாளராக கலந்துகொண்ட உளவள வைத்தியர் திருமதி. முல்லை பரமேஸ்வரன் அவர்கள் “விஷேட தேவைகளையுடைய சிறுவர்களின் திறன்களை மேம்படுத்தல்” தொடர்பாக கருத்துக்கூறினார்.





