யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி Major General Sujeewa Hettiarachchi அவர்கள் மரியாதை நிமித்தமாக 14.06.2023 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினாா். இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் ஆகியோா் கலந்து கொண்டனர்
மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற கலாசார நல்லிணக்க ரீதியான மக்கள் மயப்படுத்தல் நோக்கில் திரைப்பட ஒளிபரப்பு செய்தலின் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் மேல்மாகாண மட்டத்தில் 26.05.2023 அன்று நீதியமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்சித்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு 15.06.2023 வியாழக்கிழமை நீதியமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் Zoom செயலி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஒளிபரப்பானது.
இதில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவணர் சிவபாலசுந்தரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரநாதன் அவர்களும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்திற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான கொள்கை உருவாக்கம் தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (08.06.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) அனுசரனையுடன் வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமானது வடக்கு மாகாணத்திலுள்ள அங்கவீனமுற்ற நபர்களுக்கான கொள்கை உருவாக்கும் செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது. அதற்காக துறைசார் வல்லுநர்களின் மேலதிக ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை உள்வாங்கி அங்கவீனமுற்ற நபர்களுக்கான கொள்கை வரைபினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களுக்கான விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 15.06.2023 அன்று மாவட்ட செயலக கேட்டோர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என். கமலராஜன், ஆர்.ராஜன் (வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம்) மற்றும் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர், மும் மதகுருமார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்
நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் ( 01.06.2023) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள் , போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோரை கைது செய்தல், கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல்,பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, கடற்போக்குவரத்து நேரத்திற்கமைய தரைப்போக்குவரத்தை ஏற்படுத்தல், வாகனத்தரிப்பிடம், படகுகளில் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல், தரை மற்றும் கடற்போக்குவரத்து நேரஅட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு , படகுகளில் மோட்டாா் வாகனங்களை ஏற்றும்போது பிரதேசசெயலரிடம் அனுமதி பெறல், யாசகம் பெறுவோர் உள்வருவதை தடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.





