யாழ்.மாவட்ட செயலக உத்தியாகத்தர்களின் உடல், உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கருத்துரை வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (10.08.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து கொண்டு மக்களிடையே காணப்படும் பழக்கவழக்கம், உணவுப்பழக்கவழக்கம், ஆன்மீகம் ,இயற்கையோடு வாழ்தல் தொடர்பாக கருத்துரை வழங்கினாா்.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே ஆரோக்கியமான வேலைச்சூழலை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாாி Dr.K.சிவசுதன் அவர்கள் அலுவலகத்தையும் குடும்பத்தையும் ஆரோக்கியமாக கொண்டு செல்லல் தொடர்பாக நாம் வேலை, குடும்பம் இரண்டையும் எவ்வாறு சமநிலையில் கொண்டு செல்லலாம், அதற்காக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் நிதி முகாமை , நேர முகாமை , குழுச்செயற்பாடு தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
Healthy work place 01  Healthy work place 02  Healthy work place 03  Healthy work place 04  Healthy work place 05
 

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களில் துறைமுக தொழில்முனைவோர் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டம் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோருக்கான நிகழ்த்தித் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 08.08.2023 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், தேசிய உற்பத்தி திறன் செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட செயலக , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

Action Plan for Small and Medium Scale Entrepreneurs 01 Action Plan for Small and Medium Scale Entrepreneurs 02

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான இரண்டாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.08.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 12 சர்வதேச நிறுவனங்களும் 25 உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், அவை தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது யாழ் மாவட்டத்தில் வறட்சியால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான திட்டங்கள் , சிறுவர்கள் யாசகம் பெறுவது, வியாபாரத்தில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விழிப்புணர்வு பதாகைகள் அமைப்பதற்கான திட்டங்கள்,சிறு கைத்தொழில் சாா் நடவடிக்கையில் ஈடுபடும் துறையினருக்கான ஆரம்ப முதலீடுகளுக்கான உதவித்திட்டங்கள்,உள்நாட்டு வெளிநாட்டு தொழில் சாா் தகைமை சான்றிதழ் மற்றும் பயிற்சிகளுக்கான திட்டங்கள் போன்ற திட்டங்களை உள்வாங்குவதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இ்க்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) , உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேசசெயலாளர்கள் மற்றும் IOM, UNDP பிரதிநிதிகள் ,World Vision
SOSChildren Village,We effect FAIR MED FOUNDATION,Humedica,The Halo Trust,Aide et Action,Care For Education,Solidarity Center,Humanity and Inclusion,Search for common Ground Caritas போன்ற சர்வதேச நிறுவனங்ளின் பிரதிநிதிகள் மற்றும் ISAC,Y Gro LTD, Chrysalis, People service Council,RAHAMA,CFCD,LEADS,Oferr(Ceylo), FRC, Paalam, Jaipur,SOND, Avanka Lanka foundation, Shanthíkam, FRIENDS , Foundation of Goodness, Healthy Lanka, Women in Need, Gamnadda,Centre for Women Development,Prathiyangira Trust,Itham,SLRC உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்ளின் பிரதிநிதிகளும கலந்து கொண்டனர்

 

 

01 இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   02 இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   03 இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   04 இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்  05  இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   06 இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   07  இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   08 இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   09  இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   10  இரண்டாம் காலாண்டுக்கான மீளாய்வுக் கூட்டம்   

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (08) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் சிறுவர் சார்ந்த வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. ஆசிரியர்களிற்கான உளவள பயிற்சி, திறன் பயிற்சிகள் வழங்கவேண்டிய தேவையுள்ளது. இதனை எதிர்காலத்தில் அதிபர்கள் கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் அதிகரித்த போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம், பாடசாலை பேரூந்து சேவையினை சீர்படுத்துதலினை சாலை முகாமையாளருக்கு தெரியப்படுத்தல், மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுப்படுத்தியதன் நற்பயன்கள் மற்றும் பிள்ளைகள் அடைந்துள்ள வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை அதிபர்கள் 2023 க.பொ.த உயர்தர வகுப்பு பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்கள் நடைபெறுவதால் பாடசாலை மாணவர்களின் வரவின்மை காணப்படுவதாகவும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களின் கற்பித்தல் செயற்பாட்டினை நிறுத்தியமையினால் பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தில் மேம்பாடு காணப்படுவதாகவும், காலை பாடசாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் தனியார் கல்வி நிலைய செயற்பாடு இடம்பெறுவதனை கட்டுப்படுத்துமாறு கோரியதுடன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலைய செயற்பாட்டினை நிறுத்தியமையினை தொடர்ந்து செயல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் அச்சுவேலி சான்றுபடுத்தல் இல்ல செயற்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வட மாகாண ஆணையாளர், கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

01 யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல்   யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல்

கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்த பயனாளிகளுக்கு தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் ( NVQ level -iii )வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (24.07.2023) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிர்மாணக் கைத்தொழில் அதிகாரசபை (CIDA) மற்றும் தேசிய கைத்தொழில் பயிற்சிஅதிகாரசபை (NAITA)இணைந்து நடாத்திய கட்டட வடிவமைப்பாளர் (குழாய்பொருத்துனர்), கட்டட வடிவமைப்பாளர் (மேசன்) பயிற்சியை நிறைவு செய்த 32 பேருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களுக்கு மூன்று மாத பயிற்சியின் போது மாதம் 10,000 ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் பயிற்சியின் முடிவில் 5000 ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ,NAITA மாவட்ட முகாமையாளர், CIDA மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திறன் விருத்தி மாவட்ட இணைப்பாளர் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
 

  NVQ certificate 01  NVQ certificate 02   NVQ certificate 03