இலங்கை அரசசேவை வலைப்பந்தாட்ட சங்கத்தால் பதுளை மாவட்டம் பண்டாரவளையில் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுழற்சி முறை (League), விலகல் முறை (knockout) போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலக அணி சார்பாக பங்குபற்றி 05 போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான மெச்சுரை வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 19.10.2023 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீரவீராங்கனைகளுக்கான வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மெச்சுரைகளையும் வழங்கி வைத்தாா்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் , மாவட்ட, பிரதேச செயலக பயிற்றுவிப்பாளர்கள், வெற்றீட்டிய வீரவீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
 
netball 01 netball 02 netball 03 netball 04 netball 05 netball 06 netball 07 netball 08 netball 09
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்(NISD) கிளிநொச்சி பிராந்திய நிலையத்தால் சமூகப் பணி பட்டப்படிப்பு மற்றும் உளவளத்துணை டிப்ளோமா ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 021 2283044 என்ற தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD)கிளிநொச்சி பிராந்திய நிலைய தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது (NISD) இலங்கையில் சமூகப்பணி கல்வியை வழங்கும் முன்னோடியாள நிறுவனமாகும்.
இது மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்று சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கிவருவதோடு சமூக நலன்புரி மற்றும் சமூக அபிவிருத்திக்கு தேவையான மனித வளங்ளை கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்படுகின்றது.
மேலும், இந்நிறுவனமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் பட்டம் வழங்கும் நிறுவனமாக 1978ம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 25A பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது (NISD) கிளிநொச்சி பிராந்திய நிலையத்தின் ஊடாக சமூகப்பணி முதுமானி கற்கை நெறியினை (Master of Social Work) நடாத்த தீர்மானித்துள்ளது.
 nisd 01 nisd 02
யாழ்ப்பாண மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (15.10.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கௌரவ வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண பிரதமசெயலாளர் சமன் பந்துலசேன, அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், மாகாண நீர்பாசன பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கௌரவ கடற்தொழில் அமைச்சரின் இணைப்பாளர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதில், மாவட்ட விவசாய அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள், கமநல அபிவிருத்தி திணைக்களம் சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள், மாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் விவசாயம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், கால்நடை சுகாதார திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் நெல் அழிவுக்கான காப்புறுதிக் கொடுப்பனவு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியனவும் வழங்கிவைக்கப்பட்டன.
 
Agri dev 01 Agri dev 02 Agri dev 03 Agri dev 04 Agri dev 05 Agri dev 06 Agri dev 07
வடமராட்சி நீரேரியின் செயல்பாட்டுக் கையேட்டை மேம்படுத்தல் தொடர்பான மாவட்ட மட்ட உறுதிப்படுத்தல் பயிற்சிப்பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (17.10.2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
வடமராட்சி நீரேரியின் செயல்பாட்டுக் கையேட்டை மேம்படுத்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பாக கிராம மட்ட ,பிரதேச மட்ட பங்குதாரர்களின் கருத்துக்கள், தொண்டைமானாறு தடுப்பணைக் கதவுகளின் தற்போதைய இயக்க பொறிமுறை மற்றும் தற்கால சூழலுக்கேற்ப மாற்றி அமைத்தல், பங்குதாரர்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புகளை கையளித்தல், ஒன்றிணைந்த நீரேரி முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை கண்டறிதல் , பிரதேச செயலக ரீதியாக கண்டறியப்பட்ட பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
 
வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகு, வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் N.சுதாகரன், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் (கிளிநொச்சி) K.கருணாநிநி, வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் S.சர்வராஜா, வடமாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் A.அமிர்தசீலன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் , பிரதி விவசாய பணிப்பாளர், துறை சாா் நிபுணத்துவ பேராசிரியர்கள் ,மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள்(கோப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, மருதங்கேணி) , துறை சாா் திணைக்கள அதிகாரிகள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
thondaimanaru 01 thondaimanaru 02 thondaimanaru 03 thondaimanaru 04 
சுற்றுலா ஊக்கப்படுத்தலுக்கான உள்ளூர் உற்பத்தி பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (17.10.2023) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறிப்பாக சுற்றுலா காலாசார வழிகாட்டி குறிப்பு தயாரித்தல், வலையமைப்பு உருவாக்கம், துறைசார் உள்ளடக்க திணைக்களங்கள் அவற்றின் செயற்பாடுகள், பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
 
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர், பனை அபிவிருத்திச்சபை முகாமையாளர், யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறைத்தலைவர், துறைசாா் திணைக்கள பிரதிநிதிகள், துறைசாா் பல்கலைக்கழக மாணவர்கள்
ஆகியோா் கலந்து கொண்டனர்
 
local product 01 local product 02 local product 03 local product 04