பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து மனித உரிமைகள் கற்கைகளுக்கான நிலையத்தினால் யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான 'மனித உரிமைகள் அணுகுமுறையின் அடிப்படையில் தீர்மானமெடுத்தல்' தொடர்பிலான பயிற்சி செயலமர்வு 14.11.2023 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நீதிக்கு ஆதரவளித்தலுக்கான இச் செயற்திட்டமானது, நீதித்துறைக்கான செயற்திட்டத்திற்கு அனுசரணையளிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுசரணையளிக்கப்படுவதுடன், UNDP மற்றும் UNICEF ஆகியன இணைந்து அமுல்படுத்துகின்றன. இப் பயிற்சி செயலமர்வானது பேராசிரியர் திரு.என்.செல்வக்குமாரன் மற்றும் சட்டத்தரணி திரு.திருநாவுக்கரசு மாரிமுத்து ஆகியோரால் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டன.
யாழ் மாவட்ட செயலாளர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் மனித உரிமை கற்கைகளுக்கான நிலையத்தின் செயற்திட்ட முகாமையாளர் திருமதி.சத்துரி ஜயவர்தன ஆகியோரும் இச் செயலமர்வில் கலந்துகொண்டிருந்தார்கள்.
இச்செயலமர்வில் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அவசியப்பாடு தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டன.

தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் ( 10.11.2023) மு.ப 9.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வு நல்லாட்சி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பாக மக்களின் தகவல் அறியும் உரிமையின் முக்கியத்துவம் கருதி அரச அதிகாாிகளுக்கு காலத்துக்குக்காலம் விழிப்புணர்வூட்டும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இதில் தகவல் சட்டம் தொடர்பான அறிமுகம், தகவல் சட்டத்தின் தகவல் உத்தியோகத்தர் , பெயர் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களின் கடமைக்குரிய விஷேடமான உறுப்புரைகளை தெளிவுபடுத்தல், 2004/66 ம் இலக்க கட்டளை மற்றும் ஒழுங்குவிதிகளை தெளிவுபடுத்தல், தகவல் சட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளிற்கிணங்க ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடையாளங்காணல் தொடர்பான விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
இச் செயலமர்வில் தகலறியும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க , வெகுசன ஊடக அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர்களான உதானி வருசா விதான, றியாசா எம் நெளபர், எப்ரியல் இளையோர் அமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையும் JICA உடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தன்னார்வ பயிற்சியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்.
NDDCB இன் அவுட்ரீச் பிரிவு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமையுடன் (JICA) இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபடும் தன்னார்வ பயிற்சியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நவம்பர் 07 ஆம் தேதி யாழ்ப்பாணம் கிரீன் கிராஸ் தனியார்விடுதியில் நடைபெற்றது.
இப் பயிற்சித் திட்டத்தில் சுமார் 100 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டதுடன் இப் பயிற்சியின் முக்கிய நோக்கம் சமூக மட்டத்தில் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதாகும்.
இதில்,யாழ் மாவட்டத்தில் தன்னார்வ தடுப்பு, கல்வி, சிகிச்சை விடயங்களில் செயற்பட்டு வருகின்ற யாழ் மாவட்ட தொண்டர்குழுவின் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்களிற்கும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டுசபையின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், JICA நிறுவன சிரேஷ்ட பிரதிநிதி நாமல் ரலபனாவே மற்றும் உதவி மாவட்ட செயலாளர், வடமாகாணசபை உதவி பிரதம செயலாளர் , அரசாங்க அதிகாரிகள், சுகாதார நிபுணர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோா் பயிற்சியில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் ( 09.11.2023) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும், இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும், அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்( காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ்.சிவரூபன், தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜெயசேகர , தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் சுகந்தராஜ், உதவி கணக்காய்வு அத்தியட்சகர் P.பற்குணன், உள்ளக கணக்காய்வாளர் செ.ரமேஷ்குமார் மற்றும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
வடக்கு மாகாணஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விஷேட முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ அமைச்சர் மனுஸ நாணயக்கார அவர்களின் வழிகாட்டலின் கீழ் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார அவர்களின் தலைமையில் (09.11.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு அறிக்கை , அவர்களின் மாவட்ட ,பிரதேச செயற்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது "யாழ் மாவட்டத்திலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வோா் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்ததுடன், அதிகமாக பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றிருப்பதாகவும் தெரிவித்தாா். மேலும் வடக்கு மாகாணத்துக்கான மொழிப் பயிற்சி நிலையத்தின் தேவை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கேற்ற தொழில் கல்வி கல்லூரிகளில் காணப்படாமை" தொடர்பாகவும் கூறினாா்.
இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் S.M.பியதிஸ்ஸ மற்றும் J.S.பிரசாத் பியசேன , பணிப்பாளர் நாயகம் திரு.K.A.S. ஹேமகாந்தி சிரேஷ்ட உதவி செயலாளர்கள் டொனால்ட் மொறாஜ் மற்றும் K.நிகரில்காந் , பிரதிப்பணிப்பாளர் நாயகம் M.P.D.C.W குமாரி, அமைச்சின் அலுவலர்கள் , யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என் கமலராஜன் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிப் பணிப்பாளர் நாயகம் J.A.D.P மஞ்யுளா மற்றும் வடமத்திய மாகாண சிரேஷ்ட முகாமையாளர் H.சுனில் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னாா், முல்லைத்தீவு மாவட்ட ,பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டிருந்தார்கள்.
<





