வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான (வெளிநாட்டு வேலைவாய்ப்பு)பயிற்சி நெறி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் 27.10.2023 மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.15 வரை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறியில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான குடும்ப அபிவிருத்தி்த் திட்டம் , நிதி முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் பயிற்சியளிக்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல் பிட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 30.10.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சட்ட விரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல் , மக்களுக்கு இலகுவாகவும் நியாயமான விலையிலும் மணல் கிடைப்பதை உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வன பரிபாலன சபை பணிப்பாளர் நாயகம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் நிகழ்நிலை ஊடாக கலந்து கொண்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள், துறைசாா் திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொலிஸ் திணைக்கள பிரதிநிதிகள், கிராம சேவகர்கள் கிராம அபிவிருத்தச் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்கள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, வடக்கு மாகாண அமைச்சுக்கு பதவியுயர்வு பெற்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இவர் 1999 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தத்தராக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அரச நியமனத்தை பெற்று, 2002 ஆம் ஆண்டு உதவித்திட்டமிடல் பணிப்பாளராக பணிபுரிந்து, 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக நியமனம் பெற்றாா். நானாட்டான் மற்றும் வவுனியா பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து பின் நெடுந்தீவு மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராக சிறப்பாக சேவை செய்து 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி இலங்கை திட்டமிடல் சேவையின் அதிவிஷேட தரத்தின் நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சிற்கு பதவி உயர்வு பெற்றுச் செல்லும் திருமதி. செல்வராணி நிக்கொலஸ்பிள்ளை அவர்களின் பிரிவுபசார விழா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் ( 27)மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்றுச் செல்லும் திருமதி. செல்வராணி நிக்கொலஸ்பிள்ளை அவர்கள் 1989 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறையில் உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்றுக் கொண்டாா்.
1990 இல் முகாமைத்துவ பட்டதாரி பயிலுநராகவும் ,1992 இல் திட்ட அமுலாக்க உத்தியோகத்தராகவும் ,1997 இல் திட்ட உத்தியோகத்தராகவும் ,1999 இல் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும், 2011 இல் பிரதி திட்டமிடல் பணிப்பாளராகவும் ,2017 இலிருந்து 2023 வரை ஆறு வருடங்கள் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராகவும் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , திரு.நிக்கொலஸ்பிள்ளை மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





