ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இம் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் 02.11.2023, 03.11.2023 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதேச செயலக அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதில், தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தேசியஅடையாள அட்டை வழங்கல் தொடர்பான கடமைகளினை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்கள் தொடர்பாகவும், திணைக்களங்களினதும் பிரதேச செயலகங்களினதும் கடமைகள், பொறுப்புக்களை வரையறுத்தல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில்ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி, மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளர், ஆட்பதிவு திணைக்கள பிரதம கணக்காளர், ஆட்பதிவு திணைக்கள இணைப்பாளர், ஆட்பதிவு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.



யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 26.10.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட சட்ட ஒழுங்குகள், விவசாயம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், சமூக பாதுகாப்பு நலன்புரி நன்மைகள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதி பெறும் செயற்திட்டங்கள், சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்தல், விவசாய மற்றும் வயல் நிலங்களில் கட்டடங்கள் அமைத்தலை தடுத்தல், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல், தீவகங்களுக்கிடையிலான கடல் கடந்த போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும், சிகையலங்கார தொழிற்ச்சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினரின் கோரிக்கைகளும் ஆராயப்பட்டன. இதில் கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பிரதிநிதி, வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், மத்திய மற்றும் மாகாண திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், யாழ் மாவட்ட இராணுவக் கட்டளை தளபதியின் பிரதிநிதி, முப்படையினர், விஷேட பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தரகள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






