வடக்கு மாகாணஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விஷேட முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ அமைச்சர் மனுஸ நாணயக்கார அவர்களின் வழிகாட்டலின் கீழ் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார அவர்களின் தலைமையில் 09.12.2023 காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு அறிக்கை , அவர்களின் மாவட்ட ,பிரதேச செயற்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது "யாழ் மாவட்டத்திலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வோா் அதிகமாக காணப்படுவதாக தெரிவித்ததுடன், அதிகமாக பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றிருப்பதாகவும் தெரிவித்தாா். மேலும் வடக்கு மாகாணத்துக்கான மொழிப் பயிற்சி நிலையத்தின் தேவை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கேற்ற தொழில் கல்வி கல்லூரிகளில் காணப்படாமை" தொடர்பாகவும் கூறினாா்.
இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் S.M.பியதிஸ்ஸ மற்றும் J.S.பிரசாத் பியசேன , பணிப்பாளர் நாயகம் திரு.K.A.S. ஹேமகாந்தி சிரேஷ்ட உதவி செயலாளர்கள் டொனால்ட் மொறாஜ் மற்றும் K.நிகரில்காந் , பிரதிப்பணிப்பாளர் நாயகம் M.P.D.C.W குமாரி, அமைச்சின் அலுவலர்கள் , யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என் கமலராஜன் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், இலங்கை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிப் பணிப்பாளர் நாயகம் J.A.D.P மஞ்யுளா மற்றும் வடமத்திய மாகாண சிரேஷ்ட முகாமையாளர் H.சுனில் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னாா், முல்லைத்தீவு மாவட்ட ,பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டிருந்தார்கள்.






2023 ஆம் ஆண்டிற்கான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான மாவட்ட மட்ட முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (14.11.2023) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வெள்ளம் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியம் உள்ள இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகால்கள் சீரமைப்பு, பாதுகாப்பற்ற கிணறுகளை அடையாளப்படுத்தல் , ஆபத்தான பாரிய மரங்கள் மற்றும் மரக்கிளை ஆகியவற்றை அடையாளங்கண்டு உரிய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கால முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர், உதவிமாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள்,சுகாதார திணைக்கள பிரதிநிதிகள், பொலீஸ் அதிகாரிகள், முப்படைகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பங்குதாரர்கள் உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.





