பால்நிலை வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சேவை நாடிவரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவசர தேவைக்குரிய பொருட்கள் அடங்கிய 85 பொதிகள் வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் ,சமூக சேவைகள் ,கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழில்துறையும் தொழில் மேம்பாடும், மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சினால் (2023.10.19) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு உடுவில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் அவர்களின் தலைமையில் கந்தரோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட (J/206) யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரியில் 22.10.2023 பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டதோடு, உடுவில் பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஜனசபை முன்னோடி வேலைத் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து தேசிய ஜனசபை செயலாளரின் உரை, முன்னாள் சபாநாயகர் கௌரவ கருஜயசூரிய அவர்களின் வாழ்த்துச்செய்தி, பணிப்பாளர் சட்டத்தரணி அகலங்க ஹெட்டியாராச்சி அவர்களின் ஜனசபை முறை தொடர்பான தெளிவூட்டல் ஆகியன காணொளி ஊடாக இடம்பெற்றன.
தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர்அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் உரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தரோடை கிராமசேவகர் பிரிவிற்கான 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனசபை மக்களால் தெரிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செயற்குழுவின் முன்மொழிவு வேலைத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஜனசபை முறை என்பது கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் தமது கிராமத்தில் எத்தகைய அபிவிருத்தி இடம்பெற வேண்டுமென தாமே தீர்மானிப்பதற்கு வாய்ப்பு இடம்பெற வேண்டுமென வழங்கும் ஒரு முறையியல் ஆகும்.
ஜனசபை முன்னோடி வேலைத் திட்டத்தின் கீழ், பங்குபற்றல் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் 27 முன்மாதிரி ஜனசபைகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உடுவில் பிரதேச செயலாளர் த.முகுந்தன், வடமாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ரவீந்திர டீ சில்வா, ஜனசபை செயலகத்தின் தகவல் உத்தியோகத்தர் S.M.ரசீன் மற்றும் வடக்கு மாகாண சபையின் பிரதம கணக்காளர், கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், மாநாகர சபை செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நல்லிணக்க செயன்முறை தொடர்பாக நிர்வாக கிராம அலுவலர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்களுடனான விழிப்புணர்வு கலந்துயாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 19.10.2023 அன்று மு.ப 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வுகள் மாவட்ட செயலக நலன்புரிச்சங்க தலைவரும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளருமான திரு. சுரேந்திரநாதன் தலைமையில் (24.10.2023) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும் நலன்புரிச்சங்க போசகருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதோடு, காரியாலய விழாக்களில் ஒன்று கூடலின் சிறப்பு , சமய ,கலாசார, பழக்கங்களை பின்பற்றல் , அரசசேவை தொழில் பாதுகாப்பு அதன் நன்மைகள், மனித இயல்புகள் , ஐம்புலன் பரிமாற்ற செயற்பாடுகள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வின் சிறப்பு சொற்பொழிவாற்ற கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் திரு.வேல்நந்தகுமாா் அவர்களால் "கலைமகள் ஔியில் கவிநூறு பணி" எனும் தலைப்பில் நவராத்திரியின் சிறப்புக்கள் , அலுவலகத்திற்கும் நவராத்திரிக்குமான தொடர்பு , பெண்மையை போற்றுதல் தொடர்பாக சொற்பொழிவு ஆற்றப்பட்டது.
நவராத்திரி பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கவியரங்கம் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டோஸ்(Mandous) புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (19) பிற்பகல் ஒரு மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னாா் மெசிடோ நிறுவனத்தினால் ஊர்காவற்துறை, நெடுந்தீவு , வேலணை, தெல்லிப்பழை , பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு 45000/= பெறுமதியான
வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், (மன்னாா்)மெசிடோ நிறுவன பணிப்பாளர் , ஒருங்கிணைப்பாளர், கள ஒருங்கிணைப்பாளர், உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







