யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 15.09.2023 பிற்பகல் 3.00.மணிக்கு யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில்,யாழ் மாவட்டத்தில் தற்போதைய டெங்கு நிலவரம் தொடர்பாகவும் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை 1829 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், மழை ஆரம்பிப்பதற்கு முன்பாக டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, செப் 18- செப் 22 ஆம் திகதிகளில் பிரதேச மட்டத்தில் டெங்கு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு செப் 25- ஒக் 06 ஆம் திகதி வரை டெங்கு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு சிரமதானப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டன.

பிரதேச ரீதியாக கொள்கலன்களை அப்புறப்படுத்தல் , பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன், பிராந்திய தொற்று நோய் தடுப்பு அதிகாரி தாரணி குருபரன் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், வைத்தியர்கள் , பிரதேச செயலாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் துறை சாா் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

Health1  Health2  Health3  Health4

சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல்  தொடர்பான கலந்துரையாடல்    கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (15) காலை பத்து  மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோதமாக  கால்நடைகளை கடத்தல்  முதலானவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக பிரதேச செயலாளர்கள், பொலிஸார், படைத்தரப்பினர், பொது சுகாதார பரிசோதகர்ளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பாதுகாப்பு கட்டளைத்தளபதி, பிரதிப்  பொலிஸ்மா அதிபர், விசேட அதிரடிப்படை, சுகாதார சேவைகள் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,  பொறியியலாளர் புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம்,சிரேஷ்ட 
பொது சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
illegal activity 1 illegal activity 2
யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கைவிடப்பட்ட குளங்கள், கேணிகள் முதலான நீர் நிலைகளை துப்புரவு செய்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட வறட்சி நிலவரம் பற்றிய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 29.08.2023 இரண்டாவது நாளாக துப்புரவு பணி இடம்பெற்றுவருகிறது.
பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வல்லிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட முராவில் நீர்த்தடாகம், குறிகட்டு பிள்ளையார் கோவில் நீர்த்தடாகம் ஆகிய துப்புரவு செய்யப்பட்டன.
மேலும், வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் ஆம்பல் குளம், மண்கும்பான் ஆகிய பகுதிகளில் துப்புரவு பணி இடம்பெற்றுள்ளன.
 
pond01 Pond 02 Pond 03 Pond 04 Pond 05
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி Marc Andre Franche அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் 05.09.2023 காலை 9.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
un1   un2   un3   un4  un5
யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடம் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். எம்.ஏ.எல்.ரத்நாயக்க அவர்களால் வைபவ ரீதியாக 2023.09.03 ஆம் திகதி காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தின் பெயர்ப்பலகை, நினைவுப்படிகம் திரைநீக்கம் மற்றும் தேர்தல் அலுவலக கட்டிடம் ஆகியன உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எ.பி.சி.பெரேரா, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் சி.அமல்ராஜ், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
 

Election 01 Election 02 

Election 03 

Election 04 Election 05