தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (17) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புக்ளை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்திற்குப்பின்னர் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்குமாறும் அதேவேளை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் தரம் 9 ஆம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்பதால் அம் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புக்களை நிறுத்தும் அதேவேளை பிரத்தியேக வகுப்புக்கள் இடம்பெற்று வருவதை கட்டுப்படுத்துமாறும் அந்நிறுவனங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டன.

மேலும் தொடர்ச்சியாக ஏழுநாட்களும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளபாதிப்பை குறைக்கும் நோக்கிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பிள்ளைகளின் உளசமூக செயற்பாட்டினை மேம்படுத்தவும் அறநெறிகல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களை சமூக விருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் முகமாகவும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப வகுப்புக்களை மீள ஒழுங்குபடுத்தி செயற்படுமாறும் அரசாங்க அதிபரால் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன் மேலும் பாடசாலை நேரங்களுக்கு புறம்பாக மேற்படி தீர்மானங்களுக்கு கட்டுப்படாத குழு வகுப்புக்கள் தொடர்பாக எதிர்வரும் காலத்தில் உரிய நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , தனியார் கல்வி நிலைய இயக்குநர்கள், யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

Private tuition class meeting 01  Private tuition class meeting 02  Private tuition class meeting 03 

Private tuition class meeting 04  Private tuition class meeting 06  Private tuition class meeting 05

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் யாழ் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகமும் இணைந்து நடாத்தும் ஆடிப்பிறப்பு நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிக்கழக தலைவரும் பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (17.07.2023) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலக நலன்புரிக் கழக போசகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான அ.சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

ஆடிப் பிறப்பு நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வேலும்மயிலும் சேந்தன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 


Aadipirappu 06  Aadipirappu 01  Aadipirappu 02  Aadipirappu 05  Aadipirappu 07  Aadipirappu 04  Aadipirappu 03

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) கடமையாற்றி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக பணியாற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) இடமாற்றம்பெற்று கடமைகளைப் பொறுப்பேற்ற கனகராஜா ஸ்ரீமோகனன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (10.07.2023 ) காலை 9.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் பயிற்சியை (SLIDA) 02.09.2003-31.08.2004 வரை மேற்கொண்டதுடன் 01.09.2004 – 08.01-2012 வரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியதுடன் 09.01.2012 - 10.05.2015 வரை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார். அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) 11.05.2015 -07.07.2023 வரை எட்டு வருடங்களாக தனது சேவையை மக்களுக்கு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கனகராஜா ஸ்ரீமோகனன் ஊர்காவற்றுறை, காரைநகர், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தில் மாகாண பணிப்பாளராவும் கிளிநொச்சியில் மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு பதவிகளை அலங்கரித்து தற்போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு மேலதிக மாவட்ட செயலாளராக (காணி) உத்தியோக பூர்வமாக கடமையேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதமகணக்காளர், உதவி மாவட்ட செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேசசெயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

 01  Farewell 02  Farewell 03  Farewell 04  Farewell 05  Farewell 06  Farewell 06

யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (12.07.2023) மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் UNDP நிறுவனத்தினுடைய இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் அதன் குழுவினரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்திருந்தனர்.
மேலும், யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் அமைத்தல் தொடர்பான கோரிக்கைகளும் UNDP நிறுவனத்தினுடைய இலங்கை நாட்டின் பிரதிநிதியிடம் முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலாரஜன், UNDP நிறுவனத்தினுடைய இலங்கை நாட்டின் பிரதிநிதி Azusa Kubota, UNDP பிரதிநிதிகள், மாவட்ட செயலக மீள்குடியேற்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
 

UNDP Resettlement 01  UNDP Resettlement 02 
UNDP Resettlement 03  UNDP Resettlement 04 
UNDP Resettlement 05

யாழ்ப்பாண மாவட்ட செயலக இரண்டாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (22.06.2023) பிற்பகல் இரண்டு மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட பிரதேச செயலகங்களில் கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.