"எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள் " எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் நடாத்தும் சிறுவர், முதியோா் மற்றும் மாற்றாற்றலுடையோா் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (13.10.2023) பி.ப 3.00 மணிக்கு பழைய கச்சேரி கட்டடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பேச்சு, குழுநடனம், பாடல் நடனம் ,கவிதை போன்ற சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், சிறுவர்கள் மீதான சமூகத்தின் அக்கறை , சிறுவர் உடல் உள நலன், போஷாக்கு , கல்வி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் , விழாக்களின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துரை வழங்கினாா்.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலை உள வைத்திய நிபுணர் எஸ்.சிவதாஸ் அவர்களும், கல்வியியற்கல்லூரி் ஓய்வு நிலை விரிவுரையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு.குருபரன் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், முதியோா்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
childrenday1 childrenday2 childrenday3 childrenday4 childrenday5 childrenday6
childrenday7
நிரந்தரமாக இயலாமைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்கு வாக்கை அடையாளம் இடும் போது பயன்படுத்தக்கூடிய தற்காலிக அடையாள அட்டையை வழங்கும் முன்னோடி நிகழ்ச்சி திட்ட முதற்கட்ட கலந்துரையாடல் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கி.அமல்ராஜ் அவர்களின் தலைமையில் (12.10.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் செயன்முறையின் முக்கியத்துவம் தொடர்பான சிவில் அமைப்புகளின் பார்வை , தேர்தல் செயன்முறையில் இயலாமைக்கு உட்பட்ட நபர்களை சேர்ப்பதன் முக்கியத்துவம் மற்றும் சவால்கள், இயலாமைக்குட்பட்ட நபர்கள் அடங்கிய தேர்தல் செயன்முறை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறை பயன்பாடு,இயலாமைக்குட்பட்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அடையாளஅட்டையை காட்சிப்படுத்தல் , அறிமுகப்படுத்தப்படும் அடையாளஅட்டை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல் என்பன தொடர்பாக நடைபெற்றன.
இதில் தேர்தல் ஆணையாளர் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க , மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், இயலாமைக்கு உட்பட்ட நபர்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தவிசாளர் திருமதி.ராசாஞ்சலி பதிரகே, பவ்ரல் அமைப்பின் தேசிய இணைப்பாளர் சுஜீவ கயனாத், மேலதிக தேர்தல் ஆணையாளர் திரு.எஸ்.அச்சுதன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி),சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதி மற்றும் இயலாமைக்குட்பட்டவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்
 
election 1 election 2 election 3 election 4

சீ.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் செயற்படுத்துதல் தொடர்பான அறிவூட்டல் பயிற்சிப் பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 04.10.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூக சேவைகள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் சீ.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் செயல்படுத்தி அறிக்கையை Google forms மூலம் நிகழ்நிலையினூடாக சமர்ப்பிக்கும் நிகழ்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள்அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சி.பி.ஆர் கருத்திட்டங்களை பிரதேச மட்டத்தில் எவ்வாறு செயற்படுத்தல் என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்

cpr

Hospitality courses

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் "வல்லுவம்" காலாண்டு இலத்திரனியல் சஞ்சிகை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இன்று (06.10.2023) பி.ப 12.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இவ் இலத்திரனியல் சஞ்சிகை 36 பக்கங்களை கொண்டதாகவும் கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியதாகவும் காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவரவுள்ளது.

இவ் இலத்திரனியல் சஞ்சிகை வெளியீட்டில் பிரதம கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் இலத்திரனியல் சஞ்சிகை வெளியீட்டுக் குழுவினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

வல்லுவம்" இலத்திரனியல் சஞ்சிகையினை கீழுள்ள இணைப்புக்கள் மூலம் வாசிக்க முடியும்.

http://jaffna.dist.gov.lk/index.php/en/downloads/magazine.html

valluvam 1valluvam 2valluvam 3valluvam 4  valluvam 6valluvam 5