மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்குரிய முன்னேற்ற அறிக்கை கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 27.02.2023 அன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
எமது இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான ஊக்கப்படுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அதற்கு Iom நிறுவனத்துடன் இணைந்து மொழிப்பயிற்சிகளை மேற்கொண்டு ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தலைமையில் (16.02.2023) பிற்பகல் 2.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்திற்கு மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர், கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், தென்னை அபிவிருத்திச்சபை பிராந்திய முகாமையாளர், பனை அபிவிருத்திச்சபை பிரதிநிதிகள், புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகள், மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளர் வங்கிகளின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்பு சம்மேளனங்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது விவசாயம் தொடர்பான விடயங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
உணவு பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த பொறிமுறையில் பிரதேசமட்டங்களில் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் உணவு உற்பத்தியின் அடைவுமட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள், உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் ,உணவுவங்கிகளின் சமூக ,சமய ரீதியான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் தலைவராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு யாழ் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் யாழ்ப்பாண சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (06.02.2023) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முதலாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (16) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தில் மாவட்ட பிரதேச செயலகங்களில் கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும் அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் உள்ளக கணக்காய்வில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தின வடமாகாணத்திற்கான நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் (04.02.2023) "நமோ நமோ தாயே நூற்றாண்டின் முதற்படி 2023- 2048" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது காலை பிரதம விருந்தினர் வருகையுடன் ஆரம்பமாகி தேசிய கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் அணிவகுப்பு மரியாதை, அக வணக்கம், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை, பிரதம விருந்தினர் உரை, சான்றிதழ் வழங்குதல் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.பாடசாலை மாணவர்கள்,சாரணர் படையணி,கலாசார படையணி, தேசிய மாணவர் படையணி ஆகிய படையணிகளின் அணிவகுப்பினைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது . இறுதியாக மரநடுகை நிகழ்வுடன் விழா சிறப்புற நிறைவடைந்தது.





