யாழ்ப்பாண மாவட்ட உளவியல் சமூக மன்ற கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் (15.12.2022) யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
போதைப்பொருளிலிருந்து எவ்வாறு விடுபடுவது தொடர்பான உளவளத்துணை வழிப்படுத்தல்களை மேற்கொள்ளல் , சிறுவர்களின் தொலைபேசிப் பாவனை, சமகால நெருக்கடிகளுக்கான உள ஆற்றுப்படுத்தல்கள்,மாவட்ட மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளை குழுக்களாக இணைந்து இனங்காணுதல் , பாடசாலைகளில் அறநெறி வகுப்புக்களை நடாத்தும் திட்டங்களை முன்னெடுத்தல், பிள்ளைகளை போதைப் பொருள் பாவனையிலிருந்து பாதுகாத்து நெறிப்படுத்தலுக்கான உளவளத்துணை ஆலோசனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரசதிணைக்களங்களங்களிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்றையதினம் 15.12.2022 நடைபெற்றது.
 
இலங்கையின் பிரதம அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக முதலிடத்தை பெற்றுக் கொண்டமைக்கான தேசிய விருதினை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முதியோர் பராமரிப்பு சேவை தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 12.12.2022 மு.ப 9 .00 - பி.ப .4.00 மணி வரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
முதியோா் தேசிய செயலகமானது முதியோா் சமுதாயத்தினரின் நலன்புரி தொடர்பில் அனேக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது .அந்த வகையில் மேற்படி பயிற்சி பட்டறையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப் படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மனித வளர்ச்சி பருவங்கள், முதுமை பருவ செயலன்முறை, உடலியல் உதவி மற்றும் அடிப்படைத் தாதியர் திறன்கள் , படுக்கையில் இருக்கும் வயதானவர்களுக்கு தாதிய உதவி, நடைமுறை பயிற்சிகள், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாமைத்தும், செயலுக்கமான முதுமை பருவத்திற்கான உடற்பயிற்சி, முதியோர்கள் மற்றும் அவர்களுக்கான உளவளத் துணைத் திறன்களை விருத்தி செய்தல் ,முதியோர் துஷ்பிரயோகம் தொடர்பாக வளவாளர்களால் கருத்துரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

போதைப்பொருள் தடுப்பு பயிற்சி செயற்றிட்டத்தை பூர்த்தி செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்று (14.12.2022) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
போதைப்பொருளிலிருந்து எவ்வாறு விடுபடுவது தொடர்பான வழிப்படுத்தல்களை வழங்கும் பிரதான நோக்கில் கடந்த ஆறு மாத காலமாக zoom தொழில்நுட்பம் ஊடாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் அவர்கள் போதைப்பொருள் பாவனையினால் எமது சமூகம் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, இதனை தடுக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளதாக குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்ட செயலக உத்தியாகத்தர்களின் உடல், உள ஆரோக்கிய மேம்பாடு தொடர்பான கருத்துரை வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (08.12.2022) வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே ஆரோக்கியமான வேலைச்சூழலை ஏற்படுத்தும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு , விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். சபாநாத் அவர்களினால் உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலான எண்ணக்கருக்கள், உடற்பருமனை குறைப்பதற்கான உணவு எடுத்துக் கொள்ளும் அளவு, உடற்பயிற்சிகள், யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சிகள், மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதற்கான தீர்வுகள் தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டது.