யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ முன்னேற்பாட்டுக் குழுக்கூட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (10.11.2022) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு தாழமுக்க காலநிலையால் ஏற்படக்கூடிய அதிகூடிய மழைவீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு , சூறாவளி, இடி முழக்கம், நகர்பிரதேசங்கள் நீரில் மூழ்குதல் ,இடிமுழக்கம் மின்னல் தாக்கம்,தொற்று நோய்கள் பரவுதல், டெங்கு பரவுதல், உயிரிழப்பு, சொத்து சேதம் போன்ற பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டினை மேற்கொள்ளும் நடவடிக்கைகைள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக நான்காம் காலாண்டுக்குரிய கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (04.11.2022) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், இணைய நிகழ்நிலை வழியாக அமைச்சின் உள்ளகக் கணக்காய்வாளர் (Department of Management Audit), மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் (03.11.2022) காலை 9.00 மணியளவில் யாழ். மாவட்ட மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கௌரவ கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு, மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஏனைய இதர தேவைகளை பூரணப்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதம் இதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கௌரவ அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதில், அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது "தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள நடைமுறைகளை அறிந்துகொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்தோடு தற்பொழுது இங்கு உடனடிப் பிரச்சினையாக குடிநீர்ப் பிரச்சினை உள்ளது, இதனை பவுசர் மூலம் தற்பொழுது நிவரத்தி செய்துள்ளோம்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் இலங்கையின் நலிவடைந்த மற்றும் பின்னடைவான பெண்களின் நுண் மற்றும் சிறு தொழில்முனைவோர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (03.11.2022) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்

பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவருக்கு (02.11.2022) மாவட்ட செயலகத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் நிதியுதவியில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் ஊடாக இத் துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.மனோகரன் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.