சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுஜன ஊடக அமைச்சும், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவும் இணைந்து "தகவல் அறியும் சட்டத்தினை கையாளுகையில் ஊடகவியலாளர்களுக்கு உள்ள சவால்கள்" தொர்பான கலந்துரையாடல் 29.06.2022 காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேற்கொண்டது..
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் கருத்துத் தெரிவிக்கும் போது " தகவலறியும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மக்கள் தமக்கான தகவல்களை பெறமுடிகின்றது. இச் சட்டம் மக்களுக்கான ஒரு உரிமையாகவும் காணப்படுகிறது. அத்தோடு தகவலறியும் சட்டம் அரச நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையோடு, ஊழலில்லாது மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க உதவுகின்றது. அந்த வகையில் சர்வதேச தகவலறியும் தினத்தினை முன்னிட்டு வெகுஜன ஊடக அமைச்சும், தகவலறியும் ஆணைக்குழுவும் கிராம மக்கள் மத்தியில் தகவல் சட்டத்தினை கொண்டு செல்லும் நோக்கோடு இக் கலந்துரையாடலை மேற்கொள்கின்றது. எனவே இச் சட்டத்தை சரியான வகையில் அனைவரும் பயன்படுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் "கிராமத்திற்கு தகவல்கள் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்" (28.09.2022) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வட மாகாணத்தில் தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தல், தகவலறியும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆணைக்குழுவின் கடமை பொறுப்புகள், தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பான அடிப்படை அறிமுகம் மற்றும் மக்கள் தகவலறியும் சட்டத்தை சட்டத்தை பயன்படுத்தல், தகவல் சட்டத்தின் வகிபாகம், தகவலறியும் சட்டத்தை பயன்படுத்தல் மற்றும் தகவலறியும் சட்டம்தொடர்பாக வழிகாட்டுதல், தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் மற்றும் இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்குரிய விண்ணப்பங்களை தயாரிப்பதற்கு மக்களுக்கு வழிகாட்டுதல் போன்ற விடயங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் அரச அதிகாரிகள் தகவலறியும் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் ஆகியனவும் கலந்துரையாடப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்ட செயலக அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி ஆரம்ப நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (27.09.2022) கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக கரம்போட் விளையாட்டு நடைபெற்றது.மேலும்,இவ் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.முரளிதரன் , மாவட்ட செயலக கணக்காளரும் நலன்புரி சங்க தலைவருமான அ. நிர்மல் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலக கிளைத்தலைவர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்ற, சமூக நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (27.09.2022) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் UNDP நிறுவனத்தினால் யாழ். மாவட்டத்தின் சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, சங்கானை, உடுவில், கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், கண்காணிப்பு மேற்கொள்ளல் ஆகியன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தல், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கும் பயிற்சி நெறிகளை ஆரம்பித்தல், மொழித்திறன் பயிற்சி வழங்குதல், பெண்களுக்கான உதவித்திட்டங்கள் வழங்குதல் முதலான திட்டங்களுடன், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வுகள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் (27.09.2022) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான நெல், சோளம் என்பவற்றிற்கான உரவிநியோகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இவ் உர விநியோகத்தில் 70 சதவிகிதம் இரசாயனமும், 30 சதவிகிதம் சேதனப் பசளையும் விநியோகிக்க விவசாய அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கேற்ப 30 சதவீத சேதனப் பசளை விநியோகிக்கும் நிறுவன விநியோகஸ்தர்களை விவசாயிகளே தேர்ந்தெடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.





