யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன் - ஹார் அவர்கள் (19.08.2022) விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுடன் யாழ்.மாவட்ட தற்போதைய நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தொழிற் சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (19.08.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.தொழில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வேலை தேடுவோருக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் முகமாக பத்து தொழில் வழங்குநர்கள் நூற்றிஐம்பது தொழில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் வகையில் இன்றையதினம் தொழிற்சந்தை நிகழ்வு நடைபெற்றது.
சிறுவர் மகளிர் அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல்அமைச்சும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தொழில்நுட்ப அறிவினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.08.2022 அன்று காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சிரேஷ்ட முகாமையாளர் மனோஜ் கேமரத்னகே (ICTA), சிரேஷ்ட முகாமையாளர் திருமதி.சத்திகா யகம்பத் ( ICTA), உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், Geomatry Global Digital team, பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
டிஜிற்றல் மாவட்ட அபிவிருத்தி முயற்சியை ஔியூட்டும் நோக்கில் மாவட்ட டிஜிற்றல் பரிமாற்ற குழுவை நியமித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.08.2022 அன்று காலை மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையமானது (ICTA) டிஜிற்றல் தந்திரோபாய பொருளாதாரத்தை அடையும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான பிரதான ஆரம்ப முயற்சியாக அபிவிருத்தியை அடையாளப் படுத்தியுள்ளது.இதற்காக இதன் தொடர்ச்சியாக டிஜிற்றல் மாவட்ட தொழிற்பாட்டை விருத்தி செய்யும் நோக்கில் அனைத்து பிரதான பங்குதார்களின் பங்களிப்புடன் மாவட்ட டிஜிற்றல் பரிமாற்றக்குழு உருவாக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவை செயற்பாட்டு குழு கூட்டம் (16.08.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் நடப்பு வருடத்திற்கான செயற்பாட்டு திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இவ்வருடத்திற்கான மாவட்ட பண்பாட்டு விழா ஏற்பாடுகள், கலைத்திறன் போட்டிக்கான விண்ணப்ப நடைமுறைகள்,நூல் வெளியீட்டு விழா ஏற்பாடுகள்,புதிய யாப்பு திருத்த விடயங்கள்,அங்கத்தவர் சந்தா விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.





