தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையினால் போதைப்பொருள் தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வும், மெச்சுரை வழங்கல் நிகழ்வும் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 26.08.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டார். அத்தோடு உதவி மாவட்ட செயலாளர் திருமதி எஸ்.சி.என் கமலராஜன், வைத்திய கலாநிதி DR.S.சிவதாஸ் , DR.A.வினோதா மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உதவி இயக்குனர் ஏ.ரி தர்ஷன, அருட்தந்தை வின்சன் பற்றிக் அடிகளார் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை இணைப்பாளர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் .
உலக உணவுத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கான பண உதவி வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (23.08.2022) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சாவகச்சேரி, ஊர்காவற்துறை பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு அப்பிரதேசங்களில் பாலூட்டும் தாய்மார் , கர்ப்பிணித்தாய்மார் , விசேட தேவையுடையோர் , பெண்தலைமைத்துவ குடும்பங்கள், 5 அல்லது 4 உறுப்பினர்களுடைய சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் என்னும் பாகுபாட்டின் அடிப்படையில் பண உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உலக உணவுத் திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வாழ்வாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக்கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (22.08.2022) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
world vision நிறுவனத்தினால் சங்கானை , சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கான பணக்கொடுப்பனவுகள் , உணவுப்பாதுகாப்பு, சேமிப்பு ஆகிய ஒன்று சேர் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் ReSoco திட்ட மீளாய்வுக் கூட்டம் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
World Vision நிதி அனுசரைணயில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைத்தல் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.ரி.என்.சூரியராஜ் அவர்களின் தலைமையில் (23.08.2022) காலை 9.00 மணிக்கு Tilko hotel இல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் , திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் இலங்கையில் அனர்த்த அபாய குறைப்பு முறையின் சட்ட ஏற்றபாடுகள், யாழ் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரதான இடர்களும் முன்னேற்பாடுகளும், காலநிலை மாற்றத்துடன் கூடிய அனர்த்தங்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்த நிலத்தடி நீர் தேக்கமும் வெள்ளக்கட்டுப்பாடும், ஊடகவியலாளர்களின் வகிபாகமும் பொறுப்புக்களும் போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
Humedica நிறுவனத்தினால் சிறுவர் இல்ல அனுமதி கோரி காத்திருப்போர் பட்டியலில் உள்ள சிறுவர்களை சார்ந்த 100 குடும்பங்களுக்கு ரூபா 5000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் (22.08.2022) காலை 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,அரச சார்பற்ற நிறுவன இணைப்பாளர்,CRPO இணைப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.





