யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (03.06.2022) காலை 09.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விவசாயக் குழுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும், வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான கால அட்டவணைகளை மாற்றுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் உணவு வீண்விரயத்தை குறைத்து வீட்டுத்தோட்ட உற்பத்திகளை அதிகரித்தல், விதைகளின் தேவைப்பாடு, விதை நெல் தேவைப்பாடு மற்றும் விதை நெல் விலையை தீர்மானித்தல் , தென்னந்தொழிற்சாலை உற்பத்திகளை ஊக்குவித்தல் , சிறு போக மற்றும் பெரும்போக பசளைகளின் தேவை ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
விவசாய திணைக்களத்துடன் இணைந்து மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் நடாத்தும் "மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டம்" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (03.06.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்கள், விவசாயிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணையை ஊர்காவற்துறை,நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஒருதொகுதி மீனவர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திலும் குறிகாட்டுவான் இறங்குதுறையிலும் 28.05.2022 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் கௌரவ ராகேஸ் நடராஜன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,ஊர்காவற்துறை ,வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள் கடற்றொழில் சங்க தலைவர் அன்னராசா, மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ( 30.05.2022 ) ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நிவாரணப் பொதியை சம்பிரதாயபூர்வமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் கையளித்தார்.தொடர்ந்து நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள், கிராம உத்தியோகத்தர்கள் , இந்திய துணை தூதரக அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் 28.05.2002 அன்று இடம்பெற்றது.
வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணையை பயனாளர்களுக்கு விநியோகிக்கும் முறைமை, எரிபொருள் விநியோக முறைமை,மருந்துப்பொருள் தேவைப்பாடுகள், உணவுப் பொருள் தட்டுப்பாடு மற்றும் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துவற்காக யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக எடுத்து வரப்பட்டுள்ள மண்ணெண்ணையை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கூடாக கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.





