யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப்போட்டி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (26.05.2022) யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம் மற்றும் வடமாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் செல்வி. அகல்யா சேகராஜா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வேல்ட் விசன் மாவட்ட முகாமையாளர் திரு.அ.யூட் நிசாந்தன் மற்றும் இதம் நிறுவன முகாமையாளர் திருமதி.தனபாலசிங்கம் சுமதி மற்றும் கிருபா சாரதி பயிற்சி பாடசாலை உரிமையாளர் திரு.எ.கிருபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக இரண்டாம் காலாண்டுக்குரிய கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 25.05.2022 மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), இணைய நிகழ்நிலை வழியாக அமைச்சின் உள்ளகக் கணக்காய்வாளர் (Department of Management Audit), மாவட்ட கணக்கு அத்தியட்சகர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நிலைபேறான புண்ணிய கிராமம் நிகழ்ச்சித்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.05.2022 பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் குற்றங்கள் அதிகம் இடம்பெறுகின்ற இடங்களாக இலங்கை பொலீஸ் தலைமையகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களில் புண்ணிய கிராமத்தை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான கிராமத்தினை தெரிவு செய்தல், அடிப்படை பிரச்சினைகளை இனங்காணல், அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல், புண்ணிய கிராம செயற்பாட்டுக் குழுவை நியமித்தல் , கருத்திட்டங்களை பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்தல், பிரதேச செயலாளர் மாவட்டச் செயலாளருக்கு சமர்ப்பித்தல் , நடைமுறைப்படுத்தப்படும் கால அட்டவணை என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடற்போக்குவரத்து மற்றும் அதனுடன் கூடிய பிரச்சினைகள், அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 19.05.2022 மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
வடதாரகை படகு பழுதடைந்துள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக போக்குவரத்து படகுகளை பயன்படுத்தல் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற படகுகள் சான்றிதழ்களை பெறுதல், போக்குவரத்துக்கான நேர அட்டவணைகளை ஒழுங்கமைத்தல், படகு சேவைகளின் போது பயணிகளுக்கு பாதுகாப்பு அங்கி அணிதல் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 18.05.2022 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எரிபொருள் விநியோகம், மருந்து பொருட்களின் தேவைப்பாடு, சுகாதாரத் தேவைகள் , போக்குவரத்து சேவை, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் தேவை, அம்புலன்ஸ் சேவை, மின்சார பயன்பாடு, மாவட்டத்தின் உணவு தேவைப்பாடு மற்றும் விலைகள், காஸ் சிலிண்டர் விநியோகம் போன்ற நடைமுறை விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.





