புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதி அனுசரணையில் சண்டிலிப்பாய், மருதங்கேணி பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட "கலாசார மத்திய நிலையங்களின் திறப்புவிழா" தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 21.02.2022 அன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திலக் ஹெட்டியாராச்சி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ்.முரளிதரன் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மருதங்கேணி உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் தின மாவட்ட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.02.22 அன்று தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியும், அதன் பின்னர் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமை அளித்தல், வாக்காளராக பதிவு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு நாடகம், கவிதை ஆகியனவும் இடம்பெற்றது. அத்தோடு வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர்‌ கௌரவ தயாசிறி ஜயசேகரவினால் 2022.02.21 அன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கபட்டுள்ளது.
மேலும், திறப்பு விழா நிகழ்வில் பற்றிக்‌, கைத்தறி துணிகள்‌ மற்றும்‌ உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்‌ கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு விற்பனை நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினரால் 2022.02.21 அன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் தமது நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கொண்ட மகஜர் ஒன்றினை கையளித்துள்ளார்கள். இதில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்டச் செயலக உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் பொலிஸ் திணைக்கள பொறுப்பதிகாரி, வட மாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டுப் பணியகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுடனான சினேகபூர்வ சந்திப்பும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் 18.02.2022 காலை 9.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த யாழ்ப்பாண மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுடனான சினேகபூர்வ சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்கள், அதனைத் தொடர்ந்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட ஊடகப்பிரிவிற்கான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.