யாழ்ப்பாண மாவட்ட உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 09.02.2022 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் ஒரு மில்லியன் வீட்டுத்திட்டம், 0.6 மில்லியன் வீட்டுத்திட்டம், மலசலகூடம் அமைத்தல், நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்வழங்கல், நலன்புரி நிலையங்களில் வசித்த காணி கொள்வனவு செய்யப்பட்ட மக்களது தற்காலிக வீட்டினை கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கு மாற்றுதல், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், சௌபாக்கியா அபிவிருத்தித்திட்டம், மீன்பிடி அபிவிருத்தித் திட்டம், கிராமிய மற்றும் பாரம்பரிய கிராமிய ஒருங்கிணைப்பு அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
Jaffna District Government Agent Ganapathippillai Mahesan, Menik Amarasingha (U. My. H. C. R Sri Lanka National Head Office) met and discussed with respect.More government presidents (Ghani) and UNHCR representatives of Jaffna district were also participating in this discussion.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றையதினம் (08.02 2022) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.மேலும், குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் யாழ். மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் மிக சிறப்பான முறையில் தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், அதற்கு உதாரணமாக கிராம உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி மற்றும் கடமைகளை பரிசீலனை செய்தல் பிரதேச செயலக ரீதியாக இடம்பெற்று சிறந்த உத்தியோகத்தர்கள் தெரிவு இடம்பெற்றமையை தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலைசார் வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டுக் குழுவின் 2022ம் ஆண்டிற்கான முதலாவது கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (2022.02.08) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் பிரதம விருந்தினர்களாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், வடக்கு மாகாண மகளிர் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துனை அலுவலர்கள், பொலிஸ் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் JICA நிறுவனம் இணைந்து ESPD வேலைத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளை தொழில் ஒன்றில் ஈடுபடுத்தி வலுவூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை ஜெய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுமிது அவர்களும், ஜெய்க்கா நிறுவன உத்தியோகத்தர்களும் கடந்த திங்கட்கிழமை (2022.02.07) சந்தித்து ஆரம்ப வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.மேலும், முதல் கட்டமாக கரவெட்டி, மருதங்கேணி, நல்லூர் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.





