சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, சமுர்த்தி குடும்ப வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்ச்சிதிட்டத்தின் சுற்றுலாத்துறை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

நிதியமைச்சினால் முன்னெடுக்கப்படும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட பணிகள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால்  03.02.2022 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

31Un1யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு 31.01.2021 காலை விஜயம் செய்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் Mr.Robert Juham அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களை மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தின் சமகால அபிவிருத்தி , சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி கேட்டறிந்ததுடன்,மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் தற்போதுள்ள நிலைமைகள் மற்றும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ngodiss3யாழ்ப்பாண மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களுடனான விஷேட கலந்துரையாடல் 31.01.2022 காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்துகொண்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

roadaccident2யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் மற்றும் சிறந்த போக்குவரத்து கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறிமுறை பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையிலும் அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் இணைத்தலைமையிலும் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.