7MajorGen1யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் DGS Senarath Yapu RWP RSP ndu அவர்களுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்றைய தினம் (07.01.2022) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த சந்திப்பில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)திரு.எஸ்.முரளிதரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் புத்தசாசன,மதவிவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் , Covid-19 பெருந்தொற்று காலத்தில் செய்தி பரம்பல், ஊடக தர்மம் மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதின் சிறப்பான விடயங்களைத் தெளிவுபடுத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 05.01.2021 அன்று யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வில் வளவாளராக புத்தசாசன, மதவிவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட ஊடகச்செயலாளர் ஜெ.யோகராஜ் அவர்கள் கலந்துகொண்டு Covid-19 பெருந்தொற்று காலத்தில் செய்தி பரம்பல், ஊடக தர்மம் மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதின் சிறப்பான விடயங்களைத் தொடர்பாக ஊடகப் பண்புகள், செய்தி அறிக்கையிடல், செய்தி திருத்தங்கள்,ஊடகத்துறையிலுள்ள சட்ட ஏற்பாடுகள் ,ஊடகங்களின் சமூக பொறுப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக தெளிவூட்டப்பட்டதுடன், ஊடகத்துறையில் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (03.01.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக முன்னறில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி தேசிய ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மங்கல விளக்கேற்றலுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் Covid 19 பாதுகாப்பு தொடர்பான சிறப்புரையை நல்லூர் சுகாதார வைத்தியகலாநிதி க. ஜெயக்குமார் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
 

சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகிய நிதியமைச்சின் ஏற்பாட்டின் கீழ் 2021ம் ஆண்டிற்கான இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான மாவட்ட மட்ட மதிப்பீட்டில், வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் தேசிய மட்டத்தில் பயனாளிகள் இணைப்பு அடிப்படை மற்றும் நிதி சேகரிப்பு அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

29bustnddis1யாழ். நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான பேருந்து நிலையத்தினை அரச பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இணைந்து பயன்படுத்துவதற்கான பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் 29.12.2021 மாலை 4மணிக்கு நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,வடபிராந்திய போக்குவரத்துபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் , பொதுப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சு.அமிர்தலிங்கம்,இலங்கை போக்குவரத்துசபை முகாமையாளர்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.