26landuse1யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (26.11.2021) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

25madalre2

 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை தொகுத்து வெளிவரும் "யாழ்.மாவட்டச் செயலக மடல்-2020" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (25.11.2021) அன்று மாவட்டச் செயலகத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்.மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (25.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

26centen1மத்திய சுற்றாடல் அதிகார சபையின் "சுரகிமு கங்கா" சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் 26.11.2021 அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

25unhcr2யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து UNHCR இன் நிதி அனுசரணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் " பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறுநாள் செயற்திட்டத்தின் (கார்த்திகை 25-மார்கழி10) ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (2021.11.25) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.