மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு சிறந்த அனுபவப் பகிர்வுகளை பெறுவதற்காக மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் திரு.ஆ.நவேஸ்வரன் தலைமையில் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவினர் 29.11.2021 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு நட்புறவான களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களினால் 2021.11.30 அன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பு காரியாலயத்தில் வைத்து புனர்வாழ்வு பெற்ற இருவரிற்கு கணினிகள் வழங்கிவைக்கப்பட்டது.
யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் 29.11.2021 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.சு.முரளிதரன் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பாணின் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
கொழும்பு தெற்கு றோட்டறிக் கழகத்தினால் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி தொற்றுநீக்கி திரவங்களை அந்நிறுவனம் சார்பாக மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் 30.11.2021 அன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் வழங்கிவைத்தார்.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் யாழ். மாவட்டச் செயலகத்தினால் நடாத்தப்படும் "நாளைய ஆரோக்கியத்திற்கான தேசிய உடற்தகுதி திட்டம்" தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வானது கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையிலும், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் 2021.11.29 அன்று காலை 9 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.





