சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் (18.10.2025) காலை 08.30 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தனர். இவர்களை கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் , திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன் , உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி ஆகியோர் வரவேற்றார்கள் என்பதுடன் களவிஜயத்தின் ஞாபகார்த்தமாக அரச அதிபரிடம் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு பழைய பூங்காவில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.
இவ் விஜயத்தில் FAIR MED நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தி.உமாசங்கர் விளக்கமளிக்கப்பட்டது.
இவ் நல்லிணக்க களவிஜயத்தில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, கோப்பாய் "கிறவ்ரறி" கலைப்பொருள் உற்பத்தி நிலையம் மற்றும் சக்கர நாற்காலி திருத்தகம் என மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேற்றைய தினம் (17.10.2025) களத்தரிசிப்புக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டம் பயனாளிகள் இணைப்பின் அடிப்படையிலும், பணச்சேகரிப்பின் அடிப்படையிலும் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இவ் விருதினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தவிசாளர் திரு.டி.எம்.கே. திசாநாயக்க அவர்களினால் அரசாங்க அதிபர் அவர்கள் கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் பணச்சேகரிப்பின் அடிப்படையில் தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் முறையே பருத்தித்துறை, நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்கள் பெற்றுக்கொண்டன. இவ்விருதுகளை முறையே முன்னாள் பருத்தித்துறை பிரதேச செயலாளரும் தற்போதைய கௌரவ ஆளுநரின் செயலாளருமான திரு.எஸ். சத்தியசீலன் அவர்களும், நல்லூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திருமதி.யசோதா உதயகுமார் அவர்களும் முன்னாள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலரும், தற்போதைய மத்திய மாகாணத்தின் மாகாண சபை செயலகத்தின் செயலாளருமான திருமதி. சுபாஜினி மதியழகன் ஆகியோரும் பெற்றுக்கொண்டதுடன் இப்பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலர்கள், சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் கோப்பாய், உடுவில், கரவெட்டி, சாவகச்சேரி, வேலணை, தெல்லிப்பளை, சங்கானை பிரதேச செயகங்களும் தேசிய விருதிற்கான தகுதியினைப் பெற்று தேசிய விருதிற்கு தெரிவாகி இருந்தது. இவ்விருதுகளை பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
தனிப்பட்ட அடைவு மட்டங்களிற்கான தேசிய விருதினை 29 கிராம மட்ட உத்தியோகத்தர்களான கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பணச்சேகரிப்பின் அடிப்படையில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கை.வருணதாஸ் அவர்களும் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினை நல்லூர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுகுமாரன் அவர்களும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தவிசாளர் திரு.டி.எம்.கே. திசாநாயக்க, பிரதி பொது முகாமையாளர் திருமதி.கல்தாரி டி சில்வா, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் திரு.மோ.பிரகாஷ், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் சந்தைப்படுத்தல் திரு.லக்மால், அம்பாறை, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், சமுர்த்தி பணிப்பாளர்கள், திட்டப்பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், உதவி பிரதேச செயலர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் , கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கௌரவ அமைச்சர் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிபட்டறை நிகழ்வானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்றைய தினம் (14.10.2025) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் எதிர்பாராத வகையில் அனர்த்தம் ஒன்று நிகழும்போது எடுக்கப்படும் முடிவானது விரைவாகவும் வினைத்திறனாகவும் எடுக்கும்போது அச் செயற்பாடு பூரண வெற்றியளிக்கும் வகையில் அமையுமெனவும் இவ்பயிற்சி பட்டறை அனுபவங்கள் மற்றும் நாளாந்த கடமைகளுடன் இணைந்ததாகவும் குறிப்பாக முடிவெடுக்கும் திறன் குறித்த பிரதேசத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகளான பிரதேச செயலாளர்களுக்கு உள்ளதென தெரிவித்தார்.மேலும் கடந்த கால அனுபவங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து சில விடயங்களை உருவாக்கி கொள்ள வேண்டுமெனவும்
எடுக்கப்படும் முடிவுகள் விரைவானதாகவும் சரியானதாகவும் அமைவதுடன் அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் செயற்படல் அவசியமென தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம்திகதி நடைபெறவுள்ள அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கி எமது மாவட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒவ்வொருவரும் தத்தமது கடமைக்கூறுகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில்
அனர்த்தம் ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளல், எடுக்கப்படும் முடிவுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள்,பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் ,முப்டைகளின் அதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ,ஆசிரியர்கள் , அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA நிறுவனம் இணைந்து நடைமுறைப்படுத்திவரும் மாற்றுத்திறன் நபர்களுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாகாண மட்டத்திலான விருது வழங்கும் நிகழ்வு 14.10.2025 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் ஹொட்டலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன் மற்றும் JICA நிறுவன அதிதி திரு. Saimizu Thakasi ஆகியோர் பங்குபற்றலுடன் நடைபெற்றது.இந் நிகழ்வில் இத் திட்டத்தில் வெற்றிகரமாக முன்னேடுப்பதற்கு பங்களிப்பு செய்துவரும் 05 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறன் நபர்கள், தொழில் வழங்குனர்கள், பயனாளிகள், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
மேலும், வெற்றிகரமாக தொழில் வாய்ப்பினை பெற்றுள்ள 58 மாற்றுத்திறன் நபர்களில் 45 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள்,உதவிப் பிரதேச செயலாளர்கள், சமூகசேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித வலு வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் JICA நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பஸ் தரிப்பு நிலையத்தை மீள இயக்குவதுதொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் அவர்களினதும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.ம. பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.10.2025) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அரசாங்க அதிபர் கூட்டத்திற்கு கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று தனது வரவேற்புரையினை தொடர்ந்து
இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இங்கே வருகை தந்து நெடுந்தூர பேருந்து போக்குவரத்து தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தார்.அந்த கலந்துரையாடலில் மாவட்ட மட்டத்தில் அதற்கான முடிவினை எடுக்குமாறும் தெரிவித்திருந்தமையினை அடுத்து இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும் இந்த நெடுந்தூர பேருந்து போக்குவரத்து தொடர்பாக இவ் வருடம் கௌரவ ஆளுநர் தலைமையில் இரண்டு கூட்டங்கள் நடாத்தப்பட்டிருந்ததாகவும் அதற்கு முதலும் பல தடவைகள் இக் கூட்டம் நடைபெற்றதெனவும் இருந்தாலும் உடனடியான சாதகமான முடிவுகளை எட்ட முடியவில்லை எனவும் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த கலந்துரையாடல் மூலம் சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வேண்டிக் கொண்டார் .
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாண நகரம் நெரிசல் மற்றும் நெருக்கடி கொண்டதாம மாறியுள்ளது. அவற்றை ஒழுங்கமைக்க சீரமைக்க வேண்டியதேவை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதற்கு அமைவாக நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவருமான க.இளங்குமரன், பொதுப்போக்குவரத்தினை மக்களின் தேவைக்காக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமென்றும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையம் தொடர்பில் தற்போது எதிர்கொள்ளப்படும் இடர்பாடுகள் தொடர்பாகவும் இதனை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடமாற்றம் செய்வதில் உள்ள சவால்கள் தொடர்பாக பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு இது தொடர்பான நேரடி கள விஜயம் மேற்கொண்டு மேலதிக தீர்மானங்கள் எட்டப்படும் என்றும் கலந்துரையாடப்பட்டது.மேலும் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர்.
இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், தனியார் போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், மாநகர சபை பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர், தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






