மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில்கடந்த வாரம் கொழும்பு- பத்தரமுல்ல தனியார் விடுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆயிரம் இளம்தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான 4ஐ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொண்ட இளம் தொழில்முனைவோருக்கான சான்றுக் கடிதங்களை இளம் தொழில் முனைவோருக்கு வழங்கும் நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025) பிற்பகல் 2.45 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட இளம் தொழில் முனைவோருக்கு சான்றுக் கடிதங்களை வழங்கி கௌரவித்தார். இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் ஆயிரம் இளம்தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டமான 4 ஐ அனைத்து தொழில்முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயற்படக் கூடியதாக நடமாடும் சேவை ஒன்றை ஏற்பாடு செய்வதன் அவசியத்தினை விபரித்து, இளம் தொழில் முனைவோருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் (2025 - 2028 வரை) தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தேசிய 4 ஐ திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற்கட்டமாக 26 நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்,சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உதவிப்பணிப்பாளர்,தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட இணைப்பாளர், கைத்தொழில் அபிவிருத்தி சபை வடக்கு மாகாண பணிப்பாளர், தொழில்துறை திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்,உற்பத்தி திறன் செயற்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர், சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட தொழில் முனைவோர்,மாவட்ட செயலக, பிரதேச செயலக உற்பத்திதிறன் செயற்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025) 12.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட அபிவிருத்தி தேவைகளுக்கான அரசாங்க காணிகளை பிரதேச செயலக ரீதியாக பகிர்ந்தளிப்பதற்கான அனுமதி வழங்கும் நோக்கில் இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய ரீதியில் வடக்கு கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்களத்திடமிருந்து மக்கள் பயன்படுத்தும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (20.10.2025) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றதாகவும், இதில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாவும் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் இது தொடர்பான மேலதிக விபரங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைவாக காணிகளை விடுவிப்பது தொடர்பாக பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் அனுமதியைப்பெற்ற பின்னர் பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெற்று பின்னர் மாவட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் சமர்ப்பித்து அதனுடைய அனுமதியையும் பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், குறிப்பாக வேலணை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் வனவளத்திணைக்களத்தின் கீழும் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, கரவெட்டி, மருதங்கேணி, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழும் உள்ளடக்கப்படுவதாகவும். தொடர்புடைய பிரதேச செயலாளர்கள் இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமான மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த அளவு காணிகள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படாமல் தயார் நிலையில் உள்ளவர்களை இதில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ் விடயங்களை உள்ளடக்கியதாக பிரதேச செயலாளர்கள் உடனடியாக விசேட பிரதேச மட்ட காணிப்பயனபாட்டுக்குழுக் கூட்டத்தை இரண்டு வார காலத்தினுள் நடாத்தி பின்னர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவிற்கு சமரப்பிக்க வேண்டும் என்றும், முக்கியமாக இந்த காணிகள் பொதுமக்களுடைய காணிகளாவும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி நோக்கிய செயற்றிட்டத்திற்கு தேவைப்படும் காணிகளாகவும் காணப்படுவதனால் விடுவிக்கப்படவேண்டிய தேவைப்பாடு உள்ளதாவும் குறிப்பிட்டார்.
மேலும், நெடுந்தீவில் மூன்றில் ஒரு பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதனால், வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 4,562 ஏக்கர் காணியில் சுமார் 1,400 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுக்கமாக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாயத்ததிணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண, விவசாயமும் கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு சண்முகராஜா சிவஸ்ரீ அவர்களின் தலைமையில், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (30.10.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண மீன்பிடித்துறை அபிவிருத்தி சார்பாக கடந்த கால திட்டங்களும் எதிர்காலத்தில் (2026) நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இக் கலந்துரையாடல் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மீன்பிடித் தொழிலில் எதிர்நோக்கின்ற பிரச்சினைகளையும் அதேவேளை அடுத்த வருடம் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடப்படுவதாகவும்,
மேலும் யாழ் மாவட்டத்தை பொறுத்த வரையில் மக்களுடைய பிரதான தொழில்களிலே விவசாயம் மற்றும் கடல் தொழில் மிக முக்கிய இடத்தில் இருப்பதாகவும், நன்னீர் மீன் பிடி சார்ந்த ஏற்பாடுகள் மிக குறைந்தளவு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டத்தின் கடல் வளங்களோடு நன்னீர் வளமும் கொண்டதாக காணப்படுவதாகவும், அந்த வகையில் தொழில்சார் பொருளாதார ரீதியான முரண்பாட்டுக்கு இந்த கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி என்பது ஒரு ஆரோக்கியமான விடயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் ஏனைய மாவட்டங்களில் இத்தகைய செயற்பாடுகள் மாவட்ட ரீதியாக ஆராயப்படுகின்ற போது அதற்குரிய பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருக்கும் எனவும் மீன்பிடி அமைச்சராக தமிழ் பேசுகின்ற கௌரவ அமைச்சர் இராமலிங்ம் சந்திரசேகர் அவர்கள் இருப்பது பிரச்சினைகளை இலகுவாக அடையாளம் கண்டு இலகுவில் அவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவியாக இருப்பதாகவும், கடந்த வாரம் கடல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்புடைய சம்மேளனங்கள் சங்கங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடைய பிரச்சனைகள் குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் கௌரவ அமைச்சர் தலைமையில் எடுக்கப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளை இணைந்து தீர்ப்பதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் இந்திய ரோலர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சர்வதேச ரீதியாக காணப்படுவதாகவும் இது தொடர்பாக கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், அதிகாரிகள் மீனவர்களின் பிரச்சினைகளை அணுகி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அந்த மட்டத்திலேயே தீர்ப்பதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்பாடடையச் செய்யலாம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் வட மாகாண விவசாய அமைச்சு உள்நாட்டு மீன் பிடி அலகின் பணிப்பாளர் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வட மாகாண உள்நாட்டு மீன்பிடிஉதவி இயக்குநர் (NAQDA -தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டு ஆணையம்) மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி , முல்லைத்தீவு, வவுனியா, மன்னாா் மாவட்ட கடல்சாா் மீன்பிடி உதவி இயக்குநர்கள்,வடமாகாண விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025) 12.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட அபிவிருத்தி தேவைகளுக்கான அரசாங்க காணிகளை பிரதேச செயலக ரீதியாக பகிர்ந்தளிப்பதற்கான அனுமதி வழங்கும் நோக்கில் இக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய ரீதியில் வடக்கு கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்களத்திடமிருந்து மக்கள் பயன்படுத்தும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (20.10.2025) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றதாகவும், இதில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாவும் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் இது தொடர்பான மேலதிக விபரங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைவாக காணிகளை விடுவிப்பது தொடர்பாக பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் அனுமதியைப்பெற்ற பின்னர் பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெற்று பின்னர் மாவட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் சமர்ப்பித்து அதனுடைய அனுமதியையும் பெற்ற பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், குறிப்பாக வேலணை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் வனவளத்திணைக்களத்தின் கீழும் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, கரவெட்டி, மருதங்கேணி, சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழும் உள்ளடக்கப்படுவதாகவும். தொடர்புடைய பிரதேச செயலாளர்கள் இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமான மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த அளவு காணிகள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படாமல் தயார் நிலையில் உள்ளவர்களை இதில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ் விடயங்களை உள்ளடக்கியதாக பிரதேச செயலாளர்கள் உடனடியாக விசேட பிரதேச மட்ட காணிப்பயனபாட்டுக்குழுக் கூட்டத்தை இரண்டு வார காலத்தினுள் நடாத்தி பின்னர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவிற்கு சமரப்பிக்க வேண்டும் என்றும், முக்கியமாக இந்த காணிகள் பொதுமக்களுடைய காணிகளாவும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி நோக்கிய செயற்றிட்டத்திற்கு தேவைப்படும் காணிகளாகவும் காணப்படுவதனால் விடுவிக்கப்படவேண்டிய தேவைப்பாடு உள்ளதாவும் குறிப்பிட்டார்.
மேலும், நெடுந்தீவில் மூன்றில் ஒரு பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதனால், வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 4,562 ஏக்கர் காணியில் சுமார் 1,400 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இறுக்கமாக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாயத்ததிணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வட மாகாணத்தின் சிறந்த தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் வட மாகாணத்தின் தொழில்முனைவோா் விருதுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தலைமையில், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (30.10.2025) பி. ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது, வட மாகாண தொழில் முனைவோர் விருதுகள் வழங்குவது தொடர்பாக ஊக்குப்படுத்துவது மற்றும் அதனை விண்ணப்பிப்பது அதன் விளக்கங்களை வழங்குவதற்காகவும் வடமாகாண தொழில் முனைவோரை அழைத்து இருப்பதாகவும், இவ்விருது தேசிய மாகாண ரீதியில் வழங்கப்படுகின்ற உயரிய விருதாக காணப்படுவதால் தகுதியான பலர் மாவட்டத்தில் இருந்தும் அதற்கு விண்ணப்பிக்காத நிலையே மாவட்டத்தில் காணப்படுவதாகவும், பிரதேச செயலங்களின் விடயம் சார்ந்த உத்தியோகத்தர்களும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் விருது ஒன்று கிடைக்கப்பட்டால் போது அவ்விருதிற்கு நாங்கள் அடிப்படை தகுதியானவர்கள் என்றும் அதற்கு சிறப்பான தேர்ச்சி நிலை அடைந்துள்ளோம் என்பதை அவ் விருது வெளிக்காட்டி நிற்பதாகவும், விருது முனைவோரால் சிறப்படைய கூடிய நிலையும் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.மேலும், தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ள இந்த நிகழ்வு ஒரு அரிய சந்தர்ப்பமாக காணப்படுவதாகவும் நமது மாவட்டத்தை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்ற தொழில் முனைவோர் ஒரு பெறுமதிக்க அம்சமாக பார்க்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், தொழில் முனைவோர் பாராட்டப்பட வேண்டியவர்களாகவும், பட்டதாரிகளாக இருந்தால் அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை மாற வேண்டும் எனவும் இளம் தொழில் முயற்சியாளர்கள் தனியாா் துறையில் பல பரிமாணங்களில் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தொழில் முனைவோர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் போது விருது கிடைத்தாலும் கிடைக்காவிடினும் அத்தொழிலை மேம்படுத்திக்கொண்டு வெற்றிகளை அடையலாம் எனவும் அரசாங்க அதிபர் கூறினார். இந் நிகழ்வில் தொழிற்துறை மன்றத்தின் தலைவர் திரு .கு. வசீகரன் அவர்களால் வடமாகண தொழில் முனைவோர் விருதுகள் பற்றிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கூறப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.