2024ம் ஆண்டில் தேசிய ரீதியாக சமுர்த்தி வங்கிச் சேவை மற்றும் சமுர்த்தி கொடி வேலைத்திட்டம் ஆகியவற்றில் யாழ்ப்பாண மாவட்டம் இரண்டாம் இடம் - அரசாங்க அதிபருக்கு விருது வழங்கி கெளரவிப்பு
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஏற்பாட்டில்
"இது உங்களுக்காக மட்டுமே செய்யப்பட்ட நலன்புரித் திட்டம் "சமூர்த்தி திட்டத்தின் மூலம் சுய ஆற்றலுடன் வலுவூட்டப்பட்டவர்களை கீழ் மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை எடுத்துச் செல்லும் முயற்சியின் பொருட்டு மக்கள் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாராட்டும் தேசிய பாராட்டு விழாவானது
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர்
கலாநிதி உபாலி பன்னிலஹே அவர்களின்
தலைமையில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க அவர்கள் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சி.டி. களுவாராச்சி ஆகியோரது
பங்கேற்புடன் இன்றைய தினம்(28.10.2025) மு.ப. 9.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது.
சமுதாய மட்ட மற்றும் பிரதேச மட்ட அமைப்புக்களையும் அதன் தலைவர்களையும் பாராட்டும் நிகழ்வு,
தொழில்முனைவோர் ஊக்குவிப்பு,
போதைப்பொருள் மற்றும்
புகையிலை எதிர்ப்பு சமுர்த்தி கொடி தினம்.
வங்கி ஹரசர ஆகிய
நான்கு கருப்பொருள்களின் கீழ்
சமூகத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய ரீதியாக வங்கிச் சேவையில் இரண்டாம் இடத்தினைப் பண்டத்தரிப்பு சமுர்த்தி வங்கி பெற்றுக்கொண்டதற்கான பாராட்டு விருதும், சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு சமுர்த்தி கொடி வேலைத்திட்டத்தில் அதிகூடிய வருமானம் பெற்றமைக்காக வெள்ளிப் பதக்கமும் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் சமூக வலுவூட்டல் தொடர்பான ஒரு தொகுதி வெளியீடும், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வெளியீடும் மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர் பற்றிய தகவல்களைக் உள்ளடக்கிய நிகழ்நிலை புத்தக வெளியீடு போன்ற சிறப்பு அம்சங்கள் இங்கு செயல்படுத்தப்பட்டன.
சமுதாய அடிப்படை வங்கிகளின் தரப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பண்டத்தரிப்பு வங்கி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக் கொண்டதுடன், நல்லூர் பிரதேச செயலகத்தின் கல்வியங்காடு வங்கியும் வேலணை பிரதேச செயலகத்தின் வேலனை வங்கியும் தரப்படுத்தலில் உள்ளடங்குகின்றன.
2024 ஆம் ஆண்டுக்கான அதிக லாபம் ஈட்டிய வங்கிகளில் மருதங்கேணி அம்பன் வங்கியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் மற்றும்
புகையிலை எதிர்ப்பு சமுர்த்தி
கொடி தினத்துக்குரிய நிதி சேகரிப்பில் கோப்பாய் பிரதேசத்தின் கோப்பாய் வங்கி விருதினைப் பெற்றுக் கொண்டது.
சமுர்த்தி வங்கி தரப்படுத்தலில் நல்லூர், கரவெட்டி வங்கிகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் வங்கிகளின் நல்லூர், கரவெட்டி , காரைநகர் , சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், சங்கானை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலங்களின் வங்கிகள் A தரத்துக்குரிய வங்கிச் சங்கங்களாக தெரிவு செய்யப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் யாழப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி, சண்டிலிப்பாய் முன்னாள் பிரதேச செயலாளர் திருமதி சுபாசினி மதியழகன், மாவட்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி முகாமையாளர், மாவட்ட சமூக அடிப்படை அமைப்பு முகாமையாளர்,மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மக்கள் தலைவர்கள், தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ''2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்" நிகழ்வு (23.10.2025) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக் கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயல்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வானது "அழகான நாடு - புன்னகைக்கும் மக்கள் "என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு,சுற்றுச்சூழலுக்கு உகந்த அரச நிறுவன பிரிவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு , சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்ட பிரிவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு, ஊடக பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ,ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூா் பிரதேச செயலகம் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award மற்றும் அகில இலங்கை ரீதியாக சிறந்த சமூக வலைத்தளத்திற்கான (Facebook ) Special Jury Award ஆகிய இவ் இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
 
 
1 2
1"தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளான வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக புலமையாளர்களை ஒன்றிணைத்து தமிழ்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுவது தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டுவது மிகவும் பொருத்தமானது "- அரசாங்க அதிபர் தெரிவிப்பு
அரச கரும மொழிகள் திணைக்களமும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கமும் இணைந்து நடாத்தும் புலமைத்துவக் கலந்துரையாடல் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.10.2025)காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் தகைசார் விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் அரசகரும மொழிகள் திணைக்ளத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் நந்தன கெட்டியாராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
இந்நிகழ்வின் தகைசாா் விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள்
கருத்து தெரிவித்த போது
தமிழ் மொழியின் வரலாற்று முக்கியத்துவமும் அதனுடைய கலாசார பெறுமதியும் தொடர்பாக புலமைத்துவக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தமிழ் மொழிக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரமாக பார்க்கக் கூடியதாக உள்ளதாகவும்,அந்த வகையில் இந்த ஏற்பாட்டை மேற்கொண்ட அரசகரும மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் நந்தன கெட்டியாராச்சி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தாா். மேலும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் செயல் வேகம் தொடர்பாகவும் தமிழர்களாக நாம் பிறந்ததில் பெருமை கொள்வதாகவும் மேலும் ஒரு அங்கீகாரம் சேர்ப்பதாக இக் கலந்துரையாடல் அமைந்துள்ளதாகவும் தெரிவித்ததுடன், இதனுடைய நோக்கம் தமிழ் மொழி தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இ்ந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தகைய தமிழ் மொழியினுடைய பிறப்பிடமான இந்த மண்ணிலே இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கு முன் நின்று உழைக்கும் அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண தமிழ் சங்கத்திற்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு எங்களுடைய தமிழ் மொழியின் வளர்ச்சியை செம்மொழியாக பார்க்கும் போது அம்மொழியின் பெருமைகளை அதன் ஆற்றலையும் நாடு கடந்த ரீதியாக பறைசாற்ற வேண்டிய தேவைப்பாடு எமக்கு இருப்பதாகவும் , அழிந்து வருகின்ற கலைகளையும் காப்பாற்ற வேண்டிய தேவைப்பாடும் காணப்படுவதாகவும் அதற்கு வழி கூறுவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளதாகவும் தமழர்களின் முதுபெரும் சொத்தான யாழ்ப்பாணபல்கலைக்கழகம் அதற்கான அங்குராரப்பனத்தை மேற்கொண்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாக காணப்படுவதாகவும் சர்வதேசரீதியாக பல்வேறு புலமையாளர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளதாகவும் அத்தகைய இடத்தில் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தாா்.மேலும் இது தொடர்பாக தொடர் கலந்துரையாடலை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினரின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பெற்று இத்தமிழ் மொழி தினத்தை அனுஷ்டிக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாகவும் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளையும் இணைத்து அவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்து பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்வதன் மூலம் தமிழ் மொழியின் இலட்சிய பயணத்தை நோக்கி பயணிக்க முடியும் என்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளான வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக புலமையாளர்களை ஒன்றிணைத்து தமிழ்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுவது தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டுவது மிகவும் பொருத்தமானது அரசாங்க அதிபர் தெரிவித்தார் .
புலமைத்துவ கலந்துரையாடலின் உரையாளர்களாக பேராதனை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி.சி. பத்மநாதன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் மற்றும் உருகுணைப் பல்கலைக்கழக சிங்களத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.தம்மிக்க ரணசிங்க மற்றும் தென்னாடு பத்திரிகை ஆசிரியர் திரு.ஜீவா சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் " தமிழ் மொழியின் வரலாற்று முக்கியத்துவமும் கலாசார பெறுமதியும்" என்ற தலைப்பின் கீழ் புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு அரச அதிபருக்கான கௌரவிப்பாக நினைவுச்சின்னம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வில் யாழப்பாண பல்கலைக்கழக பேராசியர்கள், விரிவுரையாளர்கள் ,அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. ந.உமாநாத் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.ம. பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (25.10.2025) காலை 10.30 மணிக்கு அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளின் உடைய முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வேலணை,ஊர்காவற்துறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு கிடைக்கப்பெற்ற விசேட நிதியானது தற்போது கிடைக்கப்பெற்றுள்ளமையினாலும், கடல் கடந்த போக்குவரத்து மற்றும் இனிவரப்போகும் பருவகால மழை காரணமாக வேலைத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வேலணை,ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியுமெனவும் ஆனால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வேலைத்திட்டங்களை மேற்க்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதாகவும் அதனடிப்படையில் நெடுந்தீவில் முழுமையாக 3 வீதிகளின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்மென தெரிவிக்கப்பட்டதோடு நெடுந்தீவில் உள்ளே வேறு வீதிகளை புனரைமைப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கௌரவ பிரதேச சபை தவிசாளர்கள் , உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ,வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், வேலணை ,காரைநகர் ,ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர், பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களது பிரத்தியோக இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புகுழு அலுவலக இணைப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தல் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.10.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 9.00 தொடக்கம் 2.00 மணி வரை நடைபெற்றது
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், பாடசாலை சிறுவர் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக அறிவும் ஆற்றலும் அனுபவம் வாய்ந்தவர்களாக அதிபர்கள் காணப்படுவதாகவும், பாடசாலை சிறுவர் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஒரே வகையான தன்மை காணப்படுவதில்லை என்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக எழுகின்ற சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் மாவட்ட ரீதியில் ஒரே நடைமுறையினைப் பின்பற்றும் நோக்கில் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களை ஸ்தாபிப்பதில் பாடசாலைகளிடையேயும் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்ததோடு நேற்றைய தினம் நடைபெற்ற சிறுவர் அபிவிருத்திக் கூழு கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை ஆராய்ந்து மாவட்ட மட்டத்தில் தீர்ப்பதற்கு முடிவெடுக்கபட்டது எனினும் பிரதேச மட்டத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளும் மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அதனைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு வலய ரீதியாகவும் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்ட கூட்டத்தை நடாத்துவதுடன் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களின் அதில் கலந்து கொள்வதன் ஊடாக சரியான முடிவுகளை எடுக்கக்கூடியதாக இருக்குமெனவும் இதன் மூலமாக யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் சிறுவர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஒரே வகையான நடைமுறையை பின்பற்றக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தாா். மேலும் பாடசாலைகளில் முறைப்பாட்டுப்பெட்டி வைக்கும் போது முறைப்பாட்டுப்பெட்டியின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக மாணவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் சிறுவர்களை ஆற்றுப்படுத்தக்கூடிய பொறுப்பு பாடசாலைக் கட்டமைப்பிற்கு உண்டு என்றும்
சிறுவர் பாதுகாப்புக் குழுக்களில் பாடசாலை மாணவர்களே தலைவர், செயலாளராக இருக்கவேண்டும் எனவும் அதற்கான சரியான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அதிபர் ,ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிள்ளைகள் தமக்குள்ள அதிகாரத்தை அதிகமாக பயன்படுத்துவதாகவும் இதனால் பாடசாலைக்குள் முரண்பாடுகளை ஏற்படுவதாகவும் அதற்கு ஒரே மாதிரியான ஒரே வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் எனவும் கேட்டுக்கொண்டாா் .
இதில் 2024 ஆம்ஆண்டு பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்களின் மதிப்பீட்டில் பங்கு பற்றிய வடமராட்சி வலயத்தில் 07பாடசாலைகளுக்கும், வலிகாமம் வலயத்தில் 24 பாடசாலைகளுக்குமாக மொத்தம் 31 பாடசாலைகளுக்கு சான்றிதழ்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
இச் செயலமர்வில் சிறுவர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் கட்டுக்காவல் சட்டங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் திரு. ஐ. கனகராஜ் மற்றும் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக உபஅதிபர் திரு .சு.இக்னேசியஷ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சங்கானை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோா் வளவாளர்களாக கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையி்ன் மாவட்ட , பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள், உப அதிபர்கள் ,ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13