இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் ,மேலதிக அரசாங்க அதிபர் (காணி),பிரதம கணக்காளர் ,திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் "விடியல்" நூல் வெளியீட்டு விழாவானது மாற்றம் அறக்கட்டளை இயக்குனர் திரு எஸ். பெனிக்சன் தலைமையில் இன்று (23.10 2025) மாலை 3.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணம் ஆளுநர்
கௌரவ திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கௌரவ விருந்தினராக வளர்பிறை இயக்குனர் அருட்பணி சூசை டெமியன் அமதி அடிகளாா் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்
பிரதம விருந்தினரான வடமாகாணம் ஆளுநர்
கௌரவ திரு ந. வேதநாயகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்நூலாசிரியர் வின்சன் பற்றிக் அடிகளாா் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியபோதும் தனது சமூகப்பணியினை இடைவிடாது தொடர்ந்து மேற்கொண்டுவருவதாகவும் இந்நூல் சமூகத்தின் விடியலுக்கான பொருத்தப்பாடுடையதாக காணப்படுவதாகவும் தெரிவித்து, அருட்கலாநிதி வின்சன் பற்றிக் அவர்களை பாராட்டியதுடன் அவரின் சமூகப்பணி தொடர வேண்டும் எனவும் அதற்கான ஆதரவை தொடர்ந்து வழங்குவதாகவும் தெரிவித்தாா்.
சிறப்பு விருந்தினரான யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மாற்றம் மற்றும் விடியல் இரண்டுமே மிகவும் பொருத்தப்பாடுடைய தலைப்பாக காணப்படுவதாகவும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் விடியல் என்ற நூல் இரண்டுமே சமூகத்திற்கு தேவைப்பாடுடையதும் வேண்டப்படுகின்ற விடயமாக இருப்பதாகவும் தெரிவித்ததுடன், சமூகத்தில் மாற்றத்தையும் விடியலையும் ஒன்றாக காண வேண்டும் என்பதற்காக இவ்"விடியல் "என்ற நூலை வின்சன் பற்றிக் அடிகளாா் வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்ததோடுஇந் நூல் இளம் சந்ததிகளின் வாழ்வில் மாற்றத்தையும் விடியலையும் ஏற்படுத்துமாக இருந்தால் உண்மையில் அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். மேலும் வின்சன் பற்றிக் அடிகளாா் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர தன்னாலான பணிகளை யாழ்ப்பாண மாவட்டம் மட்டுமன்றி கிளிநொச்சி, மன்னாா் போன்ற மாவட்டங்களிலும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மாற்றம் அறக்கட்டளை நிறுவனம் சிறப்பாக தனது பணியை மேற்கொண்டு வருவதாகவும் விடியல் என்ற நூலை 30வது நூலாக வெளியிட்டுள்ளதாகவும் இலகுவாக வாசிக்க விளங்கக்கூடிய வகையில் நூல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சமூகத்திற்கு தேவையான விடயத்தை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் வின்சன் பற்றிக் அடிகளாா் அவர்களுக்கும் செயற்குழுவினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.அத்தோடு போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் அதிகமாக நுகர்கின்ற தன்மை காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சமூகத்தின் மாற்றத்தில் பாரிய பங்களிப்பு இருப்பதாகவும் கடமைக்கு மேலதிகமாக மாற்றத்தை கொண்டு வர திடசங்கற்பம் பூண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமென்றும் ஒவ்வொருவரது வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
"விடியல்" நூல் முதற்பிரதியினை கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைத்தார்.
விடியல் நூல் மதிப்பீட்டு உரையினைதேசிய கல்வி நிறுவகத்தின் வளவாளரும் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி திரு. பா. தனபாலன் அவர்கள் ஆற்றியிருந்தாா் இதில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் அவலங்களையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் இலகுவான தமிழில் ஆராய்ந்து "விடியல்"எனும் நூலினை படைத்திருப்பதாக தெரிவித்திருந்தாா்
இந்நிகழ்வில் இந்து மதகுரு ,
மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டுச் சபையின் மாவட்ட இணைப்பாளர் மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர்,மாற்றம் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுறுத்திய பிரதேச செயலாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துடன், முடிவுறுத்தாத வேலைத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டு திட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளின்
முன்னேற்றம் தொடர்பாகவும் வேலணை,ஊர்காவற்துறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் நகர அபிபிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் மீள் குடியேற்ற கிராமிய அபிவிவிருத்தி, வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், வடிகாலமைப்பு திட்டம், குழாய்க்கிணறு அமைப்பு, சூரிய மின்கலம் பொருந்தும் திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ,உள்ளக கணக்காய்வாளர்,
பிரதம பொறியியலாளர் , உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்கஅதிபர் அவர்கள,
சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை பிரதேச செயலக மட்டத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் ஆராயப்பட்டு தீர்க்கப்படுவதுடன், தீர்க்க முடியாத பிரச்சனைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்து தீர்ப்பதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனத் குறிப்பிட்டார். மேலும் மாணவர் இடைவிலகல் மாணவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அதில் 60 சிறுவர்கள் மீள் இணைக்கப்பட்டுள்ளதாகவும்,
பாடசாலை மாணவர்களின் பிரச்சினை தொடர்பாக வலய ரீதியில் தொடர்புடைய உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலினை பிரதேச செயலாளர்களின் தலைமையில் முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபரினால் கோரப்ப்பட்டது. அத்தோடு
பிள்ளைகளின் பதிவு செய்யப்படாத பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் வலியுறுத்தப்பட்டது.
மேலும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் அவற்றிற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1000 இளைஞர்களைதொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டமான 4ஐ செயற்றிட்டம (4 i Project) அங்குரார்ப்பண நிகழ்வானது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹண்டுன்நெத்தி மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க ஆகியோரது பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (22.10.2025) வாட்டர்ஸ் எட்ஜ், பத்தரமுல்லையில் (waters edge battaramulla ) ஆரம்பமாகியது.
திட்டத்தின் நோக்கம் தொடர்பான விளக்கங்களை கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி J.M. திலகா ஜயசுந்தர மற்றும் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. S. ஆலோக பண்டாரா ஆகியோரினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டம் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட 4ஐ செயற்றிட்ட(4 i Project) உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் ,தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகள் ,அரசாங்க அதிபர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,தேசிய உற்பத்தி திறன் செயலக அதிகாரிகள் ,சிறுதொழில் முயற்சியாளர்கள் , 4ஐ செயற்றிட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள் .






