இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் அக்ரஹார மருத்துவக்காப்புறுதி அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் அக்ரஹார நிறுவனத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அக்ரஹார விடயங்களை தெளிவுபடுத்தி அரச உத்தியோகத்தர்களை தங்கத் (gold) திட்டத்தில் உள்வாங்குவதை நோக்கமாக கொண்டும் இக்கலந்துரையாடல் அமைவதாகவும், 1997 ஆம் ஆண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டு பின்னர் 2006ஆம் ஆண்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியமாக மாற்றப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் நிறுவன செயற்பாடுகள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதால் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வுகள் பெற்றுக் கொள்ளக்கூடியடிதாக இருப்பதாகவும், இருந்த போதும் சில இடர்பாடுகளை எதிர்நோக்குவதாகவும் விடய உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோத்தர்களையும் தெளிவான விளக்கத்தினை பெற்றுக்கொண்டு இதன் மூலம் முழுமையான பயனை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார்
இக்கலந்துரையாடலில் அக்ரஹார மருத்துவக்காப்புறுதியின் நன்மைகள் , தங்கத்திட்டத்தின் பிரத்தியேக நன்மைகள், மற்றும் இத்திட்டத்தின் மூலம் அங்கத்தவர்களுக்கு மற்றும் அவர்களுடன் தங்கி வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்ளக்கூடிய உச்ச கொடுப்பனவுகள், அரச மற்றும் தனியாா் வாகன காப்புறுதிகள் தொடர்பான விடயங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில்பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, உள்ளகக் கணக்காய்வாளர் திரு.எஸ். ரமேஸ்குமாா் , அக்ரஹார திட்ட தலைவர் கலாநிதி திரு.விசாக வனசிங்க, பிராந்திய முகாமையாளர் திரு.தனுஷ்க குமார, சந்தைப்படுத்தல் உதவி முகாமையாளர் திரு.நுவான் திசநாயக்க, ,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள் அக்ரஹார காப்புறுதி நிறுவன உத்தியோகத்தர்கள் ,மாவட்ட, பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க. சிவகரன் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.மு.நந்தகோபன் இணைத்தலைமையில் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு ஊராட்சி முற்றக்கூட்டம் இன்றைய தினம்(22.10.2025) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சிறுவர், பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், பெண்களின் சிறு கைத்தொழில் உற்பத்தி, கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் ,போக்குவரத்து ஆகிய விடயங்களில் 3 விடயங்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதற்கு குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவி திருமதி.ம.தமிழ்ச்செல்வி அவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் மக்கள் எதிர்நோக்கும் பல்துறைசாா் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஊராட்சி முற்றத்தில் கலந்துரையாடி தீர்வு வழங்குவதை நோக்காக கொண்டு இக்கூட்டம் நாடாத்தப்பட்டது.இதில் ஊராட்சி முற்ற கூட்டத்தின் நோக்கம், அதன் செயற்பாட்டு அடைவுகள், செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் இணையத்தின் ஊடாக நிதி விடுவிப்பு தொடர்பான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளல், ஊராட்சி முற்ற அஞ்சல் பெட்டி வைக்க வேண்டிய இடங்கள் மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறையில் மலசலகூடப்பிரச்சினை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன
இக்கலந்துரையாடலில் மகளிர் விவகார அமைச்சின் கிறிசலிஸ் (Chrysalis )பிராந்திய மற்றும் திட்ட முகாமையாளர் ம.பிரபாகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் ,குடிசாா் அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் ,செயலாளர் மற்றும் பிரதிநிதிகள்,ஊராட்சி முற்ற அங்கத்தவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கிறிசலிஸ் (Chrysalis ) நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசாா் மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் தீபாவளி இலக்கியக் கூடல் நிகழ்வு புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களது பங்குபற்றுதலுடன் இன்றையதினம் (18.10.2025)காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களால் புத்தக கண்காட்சி சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .தொடர்ந்து பேராசிரியர் லியனகே அமரகீர்தி அவர்கள் ஆற்றிய அரச இலக்கிய பேருரையின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்வெளியீடு இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்களுக்கான
அடையாள அட்டைகளை
கௌரவ அமைச்சர் மற்றும் இலக்கிய குழுவினர் வழங்கி வைத்தனர். தொடர்ந்து புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன் மற்றும் இலக்கிய குழுவினர் ஆகியோர் பிரதேச நூலகங்களுக்கான நூல் தொகுதிகளை வழங்கி வைத்தனர். தொடர்ந்து ,வடக்கு தெற்கு கலைஞர்களுடனான சினேகபூர்வ கலந்துரையாடல் மற்றும்
நடனநிகழ்வுகள் இடம்பெற்றது.
புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்கள் கருத்துதெரிவிக்கையில் யாழ்ப்பாண மாவட்டம்
சிறந்த பாரம்பரிய விடயங்களை கொண்ட இடம் எனவும் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அத்துடன்
சர்வதேச திரைப்பட விழா இவ்வருடம் நடைபெறவுள்ளதாகவும் அது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டதாகவும்,சர்வதேச மட்டத்திலான மொழிபெயர்ப்பு நிறுவனம் உருவாக்குவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பல இலக்கிய படைப்புக்களின் மொழிபெயர்ப்பு மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன்,
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் ,
இலங்கை கலைக்கழக தலைவர் திரு. கீர்த்தி வலிசரகே, இலக்கிய துணைக்குழு தலைவர் திரு. கமல் பெரேரா, யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழித்துறைசிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சாமிநாதன் விமல் ,லேக்வுஸ் ஆசிரியர் குழு பணிப்பாளர் திரு.சிசிர யாப்பா, தினகரன் பிரதம ஆசிரியர் திரு.செந்தில்வேல் ,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புகுழு அலுவலக இணைப்பாளர் திரு.எஸ்.கபிலன், மாவட்ட செயலக ,பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள்,சிரேஷ்ட எழுத்தாளர்கள், தென்னிலங்கை எழுத்தாளர் குழு,லேக்ஹவுஸ் நிறுவன பிரதிநிதிகள்,கலைஞர்கள்,கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் வணக்கத்துக்குரிய எஸ் ஜெபநேசன் அடிகளாரும் தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும் மற்றும் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் அவர்களும் கலந்து கொண்டதோடு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ சன்முகநாதன் ஸ்ரீபவானத்தராஜா, கௌரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், உதவி தபால் அத்தியட்சகர், வட பிராந்திய பிரதி தபால்மா அதிபர், வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடலானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.10.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை வரவேற்றதுடன், ஏனையோரையும் வரவேற்று , கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் தீர்வுகளை காணும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் வாழ்வாதாரத்தில் விவசாய மற்றும் மீன்பிடி பிரதானமானது எனவும், தேசிய வருமானமானத்தை ஈட்டும் தொழிலாக கடற்றொழில் காணப்படுவதாகவும் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் இப்பிரச்சினைகளை தொடர்பாக பிரதேச மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள், மாவட்ட மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தேசிய ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் என மூன்று கோணங்களில் ஆராயப்படவேண்டும் எனவும் அதற்கு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரச்சினைகளை ஆராயந்து தீர்வு வழங்க ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், கடற்றொழி்ல் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து,
அவற்றுக்கு விரைவான முடியுமான தீர்வுகளை வழங்குவதே இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும், மீன்பிடி ஏற்றுமதியில் கடந்த வருடம் 285 மில்லியன் டொலர் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் எனவே ஏற்றுமதி மூலமாக அதிக வருமானத்தை இலங்கை பெறமுடியும் எனவும் மீன்பிடியில் நவீனமயமாக்கல் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதாகவும், மாற்றத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அரசு பொறுப்பேற்று ஒரு வருட பூர்த்தியாகயுள்ள நிலையில் நாட்டின் அபிவிருத்தியில் ஏற்படுத்திய முன்னேற்றங்களை தொடர்பாகவும் விபரித்தார். மேலும்,
இந்திய மீனவர் படகுகள் உள்நுழைவதை தடுப்பதற்கு கடற்படையை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அதற்கான முடிவுகள் எட்டப்படும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழி்ல் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் , தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) நிறுவனங்கள்யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படுகின்ற மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக முன்வைப்புக்கள் இடம்பெற்றதுடன் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டைப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட பிராந்திய கட்டளைத்தளபதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.







