அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் (Re- certification) செயல்முறை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.11.2025) பி. ப 02.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நலன்புரி நன்மைகள் "அஸ்வெசும" திட்டமானது மாவட்டத்தின் அனைத்து வித செயற்பாடுகளையும் உள்ளடக்கியதான செயற்றிட்டமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டம் சிறப்பாக செயற்படுவதாகதெரிவிக்கப்படுவதாகவும், அதற்கு முன்னின்று செயற்பட்ட உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், சில பிரதேச செயலகங்களில் விடய உத்தியோகத்தர்கள் அஸ்வெசும திட்ட செயற்பாடுகளில் ஆர்வத்தடன் செயற்பட்டு வருகிறாா்கள் எனவும் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன், இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தலில் பல சவால்களை எதிர்கொண்டதாகவும் பிரதேச செயலாளர்கள் பயனாளிகள் தரவுகளை பதிவேற்றலில் சில மாற்றங்களை மேற்கொள்ள தற்துணிவோடு செயற்பட வேண்டும் எனவும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்திலான பதிவு செய்யப்பட்டவர்களின் தகவல்களை புதுப்பித்தல் தொடர்பாக அந்த நபர்கள் தங்களது தகவல்களில் மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிவிப்பதற்கென 2025 நவம்பர் 10ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 10 ஆம்திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளலாம் எனவும், கட்டம் 1இல் தவறவிட்ட விடயங்களை சரியான பொறிமுறையை பின்பற்றி பதிவேற்றம் மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் தலைமையில் இத்திட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கேட்டறிந்து அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில், அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் விண்ணப்பங்களை கிராம அலுவலகர் பிரிவுகளில் வழங்கி அதனைப் பூரணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன்,
பிரதேச செயலகங்களில் அஸ்வெசும தரவுகளை விரைவாக பதிவேற்றல் நடவடிக்கைளை மேற்கொள்ள 15 பிரதேச செயலகங்களக்கும் மாவட்டச் செயலகத்தின்மடிக்கணனிகளை (Laptop) தற்காலிகமாகவழங்குமாறும் அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அஸ்வெசும மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள்,மாவட்ட உத்தியோகத்தர்கள் பிரதேசங்களில் இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 9
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் சகிதம் இன்றைய தினம் (11.11.2025) வலிகாமம் மேற்கு – சங்கானை பிரதேச செயலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதுடன், சங்கானை பிரதேச செயலகத்தின் ஒவ்வொரு அலுவகப் பிரிவுகளுக்கும் சென்று ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் போது, அரசாங்க அதிபர் அவர்களால் சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு அதனை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக பிரதேச செயலாளரையும் உத்தியோகத்தர்களையும் அரசாங்க அதிபர் பாராட்டினார் என்பதுடன், ஏனைய அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக சங்கானை பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார் அவர்களுடனும் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்க அதிபருடனான கண்காணிப்பு விஜயத்தில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டச் செயலக பிரதம பொறியியலாளர், மாவட்டச் செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15
யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) நிறுவனத்தின் அனுசரணையுடன் தீவகத்தின் வேலணை, காரைநகர் ஊர்காவற்துறை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் 'சுய உதவிக் குழு அணுகுமுறை ஊடாக பெண்களை வலுப்படுத்துவதனூடாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ் தீவக வலய 25 ஆசிரியர்களுக்கான பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறியின் இரண்டாம் கட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (10.11.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பிள்ளை நேய கற்பித்தல் என்பது நடைமுறையில் ஏற்கனவே காணப்படுவதாகவும் அதனை மேலும் வலுப்படுத்தி விருத்தி செய்யவேண்டிய தேவை காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன், தீவக பகுதி மாணவர்கள் தனித்துவமுடையவர்களாக காணப்படுவதகாவும் அவர்களுக்கு கற்பிக்கும் அசிரியர்கள் வினைத்திறனாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களை எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டும் எனவும் ஆசிரியத்துவம் நோக்கிய செயற்பாடு பிள்ளையின் நன்மை நோக்கியதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கல்வி செயற்பாடுகளை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதன் ஊடாக பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஆசிரியர்களை தம் மனதிலே இருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்ததுடன் இச் செயலமர்வை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டதுடன் இப் பயிற்சி நெறியை சிறப்பாக பயன்படுத்தி பயனை பெற்றுக்கொள்ளுமாறு மேலும் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு கலாநிதி.பா.தனபாலன், யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.கு.கமலநாதன், யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு.ந.தயாபரன், வேலணை பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி.நா.கிருஸாந்தினி, யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
1 2 3
அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் (Re- certification) செயல்முறை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.11.2025) பி. ப 02.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நலன்புரி நன்மைகள் "அஸ்வெசும" திட்டமானது மாவட்டத்தின் அனைத்து வித செயற்பாடுகளையும் உள்ளடக்கியதான செயற்றிட்டமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டம் சிறப்பாக செயற்படுவதாகதெரிவிக்கப்படுவதாகவும், அதற்கு முன்னின்று செயற்பட்ட உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும்,
சில பிரதேச செயலகங்களில் விடய உத்தியோகத்தர்கள் அஸ்வெசும திட்ட செயற்பாடுகளில் ஆர்வத்தடன் செயற்பட்டு வருகிறாா்கள் எனவும் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன், இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தலில் பல சவால்களை எதிர்கொண்டதாகவும் பிரதேச செயலாளர்கள் பயனாளிகள் தரவுகளை பதிவேற்றலில் சில மாற்றங்களை மேற்கொள்ள தற்துணிவோடு செயற்பட வேண்டும் எனவும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்திலான பதிவு செய்யப்பட்டவர்களின் தகவல்களை புதுப்பித்தல் தொடர்பாக அந்த நபர்கள் தங்களது தகவல்களில் மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிவிப்பதற்கென 2025 நவம்பர் 10ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 10 ஆம்திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளலாம் எனவும், கட்டம் 1இல் தவறவிட்ட விடயங்களை சரியான பொறிமுறையை பின்பற்றி பதிவேற்றம் மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் தலைமையில் இத்திட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கேட்டறிந்து அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில், அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் விண்ணப்பங்களை கிராம அலுவலகர் பிரிவுகளில் வழங்கி அதனைப் பூரணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன்,
பிரதேச செயலகங்களில் அஸ்வெசும தரவுகளை விரைவாக பதிவேற்றல் நடவடிக்கைளை மேற்கொள்ள 15 பிரதேச செயலகங்களக்கும் மாவட்டச் செயலகத்தின்மடிக்கணனிகளை (Laptop) தற்காலிகமாகவழங்குமாறும் அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அஸ்வெசும மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள்,மாவட்ட உத்தியோகத்தர்கள் பிரதேசங்களில் இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாவட்ட இளைஞர் சம்மேளனமும் இணைந்து நாடாத்திய இளைஞர் பரிமாற்ற நல்லிணக்க வேலைத்திட்டத்தின் ஆரம்ப மற்றும் அறிமுக நிகழ்வும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி சிறிமேனன் தலைமையில் இன்றைய தினம் (07.11.2025) மு. ப 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு முன்னராக குருநாகல், கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கேகாலை ,மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த 160 இளைஞர் யுவதிகள் பழைய பூங்காவிலிருந்து மாவட்டச் செயலகத்திற்கு சம்பிரதாய முறைப்படி அழைத்து வரப்ப்பட்டார்கள். இந் நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப் பணிப்பாளர் திரு. கே.டி.சி.ஹாமினி, ,யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி யு.சிவகாமி, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளருமான கௌரவ திரு. எஸ்.கபிலன், வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத் தலைவர் திரு. ரி. திருச்செந்தூரன் ஆகியோர் பங்குபற்றினார்கள். மேலும், ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வருகைதந்த இளைஞர் யுவதிகள் இன்றிலிருந்து (07.11.2025) எதிர்வரும் 12 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் யுவதிகளின் வீடுகளில் தங்கியிருப்பார்கள். அந்தவகையில், குருநாகலிருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகள் ஊர்காவற்றுறைக்கும், கொழும்பிலிருந்து வருகை தந்தவர்கள் நெடுந்தீவுக்கும், ஹம்பாந்தோட்டையிலிருந்து வருகை தந்தவர்கள் வேலணைக்கும், கேகாலைக்கும் வருகை தந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கும், மொனராகலையிலிருந்து வருகை தந்தவர்கள் காரைநகரிற்கும் சென்று அவர்களுடன் இணைந்து பழகுவதனூடாக நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துவதே இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்காகும்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 16 17 18 20 22 23