21இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (23.11.2025) காலை 09.00 மணிக்கு பழைய பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களும், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந் நிகழ்வில் ஆரம்பத்தில் பழைய பூங்கா வளாகத்தில் சம்பிரதாய முறைப்படி அதிதிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வுக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த கெளரவ அமைச்சர்கள், கெளரவ ஆளுநர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் ஊடாக இவ்வாண்டு ஒரு திட்டத்திற்கு அதிகூடிய நிதியாக ரூபா 170 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பலமுறை விஜயம் செய்து மாவட்ட விளையாட்டு அபிவிருத்திக்கு உறுதுணை யாகவுள்ளார் எனவும் இதற்கு தமது நன்றியினை கெளர அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்தார். மேலும், உள்ளக விளையாட்டரங்கம் அமையவுள்ள இடம் ஏற்கனவே வலைப்பந்தாட்ட சங்கம் மற்றும் கூடைப்பந்தாட்ட வழங்கப்பட்டது எனவும் அதனை அச் சங்கங்கள் உடன் கலந்துரையாடி மீளப்பெற்று அனைத்து யாழ்ப்பாண மாவட்டம் பயன்பெறும் வகையில் உள்ளக விளையாட்டரங்கம் அமைக்கப்பவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 2025 ம் ஆண்டு ஐனவரி முதல் பழைய பூங்கா வளாகத்தில் 280 மரங்கள் நாட்டப்பட்டு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் நீர் ஊற்றி பராமரிக்கப்படுவதாகவும், இதன் மூலம் எமது சூழல் இயற்கையுடன் பேணப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், எமது மாவட்ட அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக விஜயம் மேற்கொண்டுபல்வேறு அபிவிருத்திக்கு பங்களிப்பு ஆற்றிவரும் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்களுக்கும், பூரணமான வழிகாட்டுதலில்களை வழங்கிவரும் கடற்றொழி்ல் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் மக்களின் சார்பில் தமது நன்றியினை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இத் திட்டம் முழுமை பெறுவதற்கு மேலதிக நிதி தேவைப்பட்டால் அதனை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக கெளரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந் நிகழ்வில் அதிதிகள் உரையினைத் தொடர்ந்து, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற 23 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்றவர்கள் அதிதிகளால் கெளரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு. பிரேமச்சந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் திரு பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு எஸ். ரமேஷ்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்ட வீர வீராங்கனைகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 27 28
1தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் ஆசியா பவுண்டேசன் (Asia Foundation ) நிதி அனுசரனையின் வடமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கியினால் தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார மேம்படுத்தல் தொடர்பான பயிற்சி நெறி நிகழ்வு மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி வி.தர்சினி தலைமையில் இன்றையதினம் (21.11.2025) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்துதெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் வழங்கப்படும் கடன் வசதிகள், AI தொழில்நுட்பம், தரமிடல், Cyber security மற்றும் பொதியிடல் தொடர்பாக தொழில்முயற்சியாளர்களுக்கு கருத்துரைகள் வழங்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் தொழில் முயற்ச்சியாளர்கள் மேற்கொண்ட பொதியிடலுக்கும் தற்போதுள்ள பொதியிடலுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், உற்பத்திப் பொருட்களின் தரம் முக்கியமாக பொதியிடலில் தங்கியிருப்பதாகவும் , பொதியிடலில் எமது மாவட்டமும் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். இப்பயிற்சிகள் தொழில்முயற்ச்சியாளர்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் எனவும் இப்பயிற்சிகள் மூலம் தொழில்முயற்சிகள் மேலும் வளர்ச்சி யடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களால் Cyber security தொடர்பான பயிற்சி நெறியில் கலந்துகொண்ட 120 தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண பிரதேச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் சிரேஸ்ட திரு. உதய் ரணதுங்கா , ஆசியா பவுண்டேசன் உத்தியோகத்தர்கள , சிறு தொழில் முயற்சி அபிவிருத்திபிரிவின் முகாமையாளர், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 8 9 10 11
26சனாதிபதி செயலகத்தின்அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (21.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது. இவ் நடமாடும் சேவையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களின் பிரதிநிதி திரு. லக்ஷ்மன் அவர்களும் கலந்து கொண்டனர். இவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டு முதலாவது வேலை நாளில் சேவை நாடிகளைச் நாடிச்சென்று சேவை வழங்குதல் என்று தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய இவ் நடமாடும் சேவையும் அதில் ஒரு அங்கம் என்றும், அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது சேவையை சரியாக ஆற்றும் போது பொதுமக்களுக்கான சேவைகள் வினைத்திறனாக பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும் என்றும், இவ் நடமாடும் சேவையை தாயர்ப்படுத்திய பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், இவ் நடமாடும் சேவையானது யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக தீவுப்பகுதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டதாகவும், இவ் நடமாடும் சேவையின் நோக்கம் மக்களை தேடிச்சென்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகும் என தெரிவித்தார். மேலும் இப் பிரதேசத்தில் நீர்முகாமைத்துவம் பெரும் சவாலாக காணப்படுவதாகவும், தாளையடி குடிநீர்த் திட்டத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டு தீவகம் முழுவதும் பொதுமக்களுக்கான நீர் விநியோகம் கிடைக்கும் எனவும், அமைச்சினுடைய நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் விநியோகத் திட்டதிற்கு இவ்வருடம் கணிசமான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் , இவ்வருடம் ஏனைய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இலவச நீர் இணைப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் தீவுப்பகுதிக்கு இலவச நீர் வசதிகளை வழங்க வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீட்டுனை வழங்கும் எனவும் தெரிவித்தார். மேலு‌ம், நீர் முகாமைத்துவம் தொடர்பாக முதலைக்கழிக்குளம், பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் மக்களின் சுய முயற்சியுடன் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ் நடமாடும் சேவையை நடாத்தும் போது மக்களின் பிரச்சினைகளை ஒரே இடத்தில் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்ததுடன், இப் பிரதேச செயலகத்தின் பல உத்தியோகத்தர்கள் யாழ் நகர்ப்பகுதிக்கு அப்பால் இருந்து தொடர்ச்சியாக பல வருடங்களாக அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் அதற்காக தனது நன்றிகளையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், பல்வேறு உதவித்திட்டங்களை வழங்க பிரதேச செயலாளர் ஏற்பாடு மேற்கொண்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ளும் சேவை நாடிகள் சரியான முறையில் பயன்படுத்துமாறும் தெரிவித்ததுடன் மக்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் தோளோடு தோள் நிற்கும் எனவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், இந் நிகழ்வில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான போசாக்கு உலர் உணவுப் பொதி வழங்கல், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல், உலர் உணவுப் பொதி வழங்கல், தையல் இயந்திரம் வழங்கல், காசோலை வழங்கல், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் வழங்கும் கற்றலுக்கான ஊக்குவிப்பு பணக் கொடுப்பனவு வழங்கல் ,காணி பூரண அளிப்பு வழங்கப்படவுள்ள பயனாளிகளின் விபரம், நீண்ட கால படுக்கையில் உள்ளவர்களுக்கான கட்டில், என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதுடன் மூலிகைத்தோட்டம் திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும், இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த தம்பதிகளுக்கு திருமண பதிவும் செய்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி வனஜா செல்வரெட்ணம் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 10 11 12 15 16 22 23 24 25 26 27 28 29
 
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.11.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களின் கெளரவ தவிசாளர்களையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு ஓரளவு சீராகவுள்ளதாகவும், ஆனால் இவ்வருடம் இற்றைவரை 1027 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான டெங்கு நோய் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார். மேலும், திண்மக்கழிவகற்றல் தொடர்பாக கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் தொடர்பாக கழிவு முகாமைத்துவம் அவசியம் குறித்தும், அரச திணைக்களங்களால் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்கப்படுவது குறித்து உறுதிப்படுத்தல்கள் அவசியம் குறித்தும், பாடசாலையில் மாணவர்களுக்கு இது தொடர்பாக பழக்கவழக்கம் தேவை எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், டிசெம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 06 ஆம் திகதி வரை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்துவதாவும், பிரதேச செயலாளர்கள் தமது பிரிவிற்குரிய கெளரவ தவிசாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சமூகமட்ட அபைப்புக்களையும் ஒருங்கிணைத்து, கிராமங்களை கொத்தணி ரீதியாக பிரித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களையும் ஈடுபடுத்தி வீடுகள், பாடசாலைகள், அரச தனியார் நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் களத்தரிசிப்புக்கள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், திண்மக் கழிவகற்றலில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றியதுடன் முன்னேச்சரிக்கை மற்றும் தடுக்கும் வழிவகைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார் கள். இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் கெளரவ எச். எம். சுசில் ரணசிங்ஹ அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (20.11.2025) ஆம் திகதி பி.ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வரவேற்புரை ஆற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் கெளரவ சுசில் ரணசிங்ஹ, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதிப்பணிப்பாளர், தாளையடி நீர்வழங்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், உள்ளிட்டவர்களை அனைவரையும் வரவேற்றுக் கொண்டு, வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 1259 மில்லியன் ரூபா 2025 ஆம் ஆண்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காக மாவட்ட மக்கள் சார்பாக கெளரவ அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தார். மேலும் முடிவுறுத்தப்படாமல் இருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக்கப்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை அடுத்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அமைச்சு வழங்க வேண்டும் என தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றத்தையும், தேவைப்பாடுகளையும் கெளரவ அமைச்சரின் கவனத்திற்கு அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டதுடன், பிரதேச செயலக ரீதியாக தேவைப்பாடுகளை முன்வைக்குமாறு அரசாங்க அதிபர் அவர்களால் கோரப்பட்டதற்கமைய, பிரதேச செயலாளர்கள் தமது பிரிவுக்குரிய தேவைப்பாடுகளை கெளரவ அமைச்சர் கவனத்திற்கு முன்வைத்தார்கள்.
இறுதியாக கருத்துரையாற்றிய கெளரவ அமைச்சர் அவர்கள், இக் கூட்டம் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாகவும், சனாதிபதி இவ்விடயத்தில் கவனமெடுக்குமாறு தன்னை தனிப்பட்ட ரீதியாக அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீள்குடியேற்ற செயற்பாடுகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சென்ற ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முழுமைப்படுத்தாத வீடுகள் தொடர்பாகவும் கவனமெடுக்கப்படும் எனவும், இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார். இக் கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப்பணிப்பாளர், தாளையடி நீர்வழங்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளர்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள், பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக மீள்குடியேற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17