இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி இன்றைய தினம் (12.12.2025) யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றிணைந்து பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துடன், அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கான மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மீனவர்களின் நியாயபூர்வமான கோரிக்கையினை அதிமேதகு சனாதிபதி அவர்களின் கவனத்திற்கும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

மீள்
குடியேற்றம் மற்றும் மீள்இணைவிற்கான நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த உதவித்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் திரு. ரி. நீலாம்பரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.
குடியேற்றம் மற்றும் மீள்இணைவிற்கான நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த உதவித்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் திரு. ரி. நீலாம்பரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், தொழில் தகைமைச் சான்றிதழ் மிக முக்கியமானது எனவும், தாம் கற்ற கல்வியுடன் ஒரு மாணவன் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழை கட்டம் கட்டமாக இறுதிவரை பூர்த்தி செய்தால் அச் சான்றிதழ் பட்டதாரிச் சான்றிதழுக்கு சமனாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும், இக் கற்கை நெறிமூலம் கற்றதைக் கொண்டு மேலும் ஆற்றலுடன், முன்னோக்கி முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், போட்டி உலகில் போட்டித் தன்மையுடன் எதிர்காலத்தில் சிறக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கடந்த முறை கடற்றொழி்ல் படகு பயிற்சி 42 பேருக்கு வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசாங்க அதிபர் அவர்கள், திறமைகளை மேன்மேலும் வளர்த்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார். IOM நிறுவனத்தின் அனுசரனையில் தொழில் பயிற்சி அதிகார சபையினால், கணினி வன்பொருள் 01 பேரும், மர கைவினைப்பொருட்கள் 02 பேரும், இலத்திரனியல் 04 பேரும், தையல் 10 பேருமாக பயிற்சிகளை நிறைவு செய்த 17 பயிற்சியாளர்களுக்கு தொழிற் தகைமைச் சான்றிதழ் (NVQ level 111 & IV) அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, தொழில் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கே. நிறஞ்சன், IOM நிறுவன திட்ட இணைப்பாளர் திரு. எஸ். சுசிதரன் மற்றும் பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டமானது யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.12.2025) பி.ப 12.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளினுடைய முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் அரசாங்க அதிபரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிறைவேற்றப்பட்ட வீதிகளின் வேலைகள் மற்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும், வீதி
அபிவிருத்தி திட்டங்கள் தரமான மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் எனவும், மேலும், இணைந்தவகையில் வினைத்திறனாக செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். மேலும், மீள்குடியேற்றப் பகுதியின் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை 2026 ஆண்டு அமுலாக்குவது தொடர்பான சாத்திய நிலைமைகள் அவற்றின் நிலையான தன்மை போன்றவை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (11.12.2025) பி.ப 02.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளாக காரைநகர் ஊர்காவற்றை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலப் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 9 செயற்றிட்டங்கள் சுற்றுலா அமைச்சிற்கு மாவட்டச் செயலகத்தால் பிரேரிக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த பொழுதிலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதியின் மூலமே இதற்கான நிதி விடுவிப்பு வழங்கப்படவுள்ளதனால், இத் திட்டங்களின் அமுலாக்கலின் சாத்திய நிலைமைகள் மற்றும் நிலையான தன்மை போன்றவை தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இத் திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாவிகளை கவரும் வகையில் மேலும் யாழ்ப்பாணத்தின் சுற்றுலா இடங்களை மேலும் மெருகூட்ட வேண்டும் எனவும், திட்டங்கள் நிலைத்திருக்கக்கூடியவகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், திட்டங்களின் சாத்தியப்பாடுகளுடன் வினைத்திறனாக நிறைவேற்ற வேண்டும் எனவும், மக்களின் வரிப்பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், சரியான வினைத்திறனான திட்டங்களை அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், திட்டங்களை அமுல்படுத்திய பின்னர் அதனை சரியான முறையில் பாராமரிப்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள்இ எமது பிரதேசம் சுற்றுலாத்துறையில் தென்பகுதியை விட பின் தங்கியுள்ளதாகவும், யாழ்ப்பாண சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு அரசியல் பேதமின்றி அனைவரும் கருத்து ஒற்றுமையுடன் திட்டங்களை அடையாளம் கண்டு செயற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், எமது அரசாங்கம் அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் எனவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவல்ல திட்டங்களை இனங்கான வேண்டும் எனவும், குறிப்பாக இயற்கையோடு இணைந்த வகையிலான திட்டங்களை முன்னேடுக்குமாறும் அத் திட்டங்களேயே வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்புவார்கள் எனவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் தெல்லிப்பளை, காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை கெளரவ தவிசாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன், தெல்லிப்பளை, காரைநகர், மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு வழங்குவதற்கு ஒரு தொகுதி பாய், படுக்கை விரிப்புகள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினால் இன்றைய தினம் (11.12.2025) மு.ப. 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது அரசாங்க அதிபருக்கும் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் தேவைப்பாடுகளை மேலும் சாதகமாக பரிசீலித்து வழங்குவதாகவும், ஏனைய ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வர்த்தக சங்கம் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என். சூரியராஜா, வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. ஜனத்குமார் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






