யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் நான்காம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.பா.ஜெயகரன் (காணி) அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.12.2025) பி.ப 2.30 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக மா நாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு, சிறுவர் துஷ்பிரயோகம், பெற்றோரை இழந்த சிறுவர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகள், பிரச்சினைகள், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள், சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள், கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் செயற்பாடுகள், சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுத்தல், சிறுவர் தொடர்பான பிரதேச மட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இக்கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர்கள் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், நன்னடத்தை அலுவலர்கள் மாவட்ட, பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உளவள துணை இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9

1சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (16.12.2025) மு.ப 09.00 மணிக்கு எழுவைதீவு கிராமிய செயலகத்தில் நடைபெற்றது. இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய எண்ணக்கருவுக்கு அமைவாக, கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கான சேவையினை ஒரே இடத்திலே வழங்குவதனை நோக்காக கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் 3 நடமாடும் சேவையினை நடத்துவதற்கான தேவையுள்ளதாகவும், இலங்கையில் அதிக தீவுகளைக்கொண்ட மாவட்டமான யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக குறைந்த மக்கள் தொகையை கொண்ட தீவாக எழுவைதீவு பிரதேசம் காணப்படுவதாகவும், மக்களின் தேவை கருதி மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு சேவைவழங்குவதை நோக்காக கொண்டு இவ் நடமாடும் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும், இரு மாத்திற்கு ஒரு தடைவை எழுவை தீவு மற்றும் அனலை தீவு பிரதேசங்களக்கு மாவட்ட மட்ட உத்தியோகத்தரை அழைத்து வந்து மக்களுக்கான சேவைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார். மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளருக்கு உள்ளதாகவும், சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரட்நாயக்க அவர்களின் ஏற்பாட்டில் தீவு பகுதிகளுக்கான போக்குவரத்து அபிவிருத்திககென 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளதாகவும், இதில் ஊர்காவற்றுறை பிரதேச அபிவிருத்திக்காக 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது எனவும், எழுவை தீவிற்காக 3 வீதிகள் புனரமைப்பிற்காக 22 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுவருவதாகவும், இவ் வீதிகளை புனரமைப்பதற்கான முலப்பொருட்களை எழுவைதீவிற்கு எடுத்துவருவதில் சவாலக்ளை எதிர்நோக்கி வருவதாகவும், இதற்கு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதகாவும் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவதனால் எழுவைதீவை சுற்றாலாத் தலமாக மாற்றுவதற்கு திட்ட முன்மொழிவு கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு குறைந்தளவான வீடுகள் உள்ளன எனவும், நேரடியாக சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை அடைவதற்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதேச செயலளர் மற்றும் உத்தியோகத்தர்கள்கேட்டுக் கொண்டதுடன், மக்களுக்கு அர்ப்பணிப்பான சேவையாற்றியமைக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் வறிய மக்களுக்கு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவது என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவைக்கு சமனானதாகும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பானசேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், துணி பை, முதியவர்களுக்கான அத்தியாவசியப் பொதிகள், மரக்கன்றுகள் என்பன வழங்கப்பட்டதுடன்,அரசாங்க அதிபரினால் மரக்கன்றும் நாட்டப்பட்டது. இந் நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்றுறை பிரதேச சபை கெளரவ தவிசாளர், ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதேச இணைப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், கிராம அலுவலர்கள், மற்றும் பிரதேச செயலகத்தினுடைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
வட மாகாண சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் தொடர்பாக கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான பயிற்சி பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் ( 12.12.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக, வடமாகாண சுற்றுலாப் பணியகம் மாகாணத்திற்கான சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தினை வவுனியாப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது இதனடிப்படையில் சுற்றுலாப் பணியகமும் தயாரிப்புக் குழுவும் மாவட்டம் தோறும் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி அம் மாவட்டங்கள் தொடர்பான வளங்கள் சவால்கள் தொடர்பான உள்ளீடுகளைப் பெற்றுவருவதற்கு அமைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், யாழ் மாவட்டத்தினுடைய சுற்றுலாத்துறை பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியிலே அதனுடைய செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும், அதன் அடிப்படையில், வட மாகாணத்திற்கான சுற்றுலா தொடர்பான அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டம் மிக முக்கியமான சுற்றுலா மையமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ் மாவட்டத்தினுடைய சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில் சிறந்த திட்டங்களை உருவாக்கி ஒழுங்குபடுத்தி, அதன் ஊடாக மாவட்டத்தினுடைய சுற்றுலாவினை மேம்படுத்துவதன் ஊடாக மக்களுடைய வாழ்க்கை தரத்தினையும், வாழ்வாதாரத்தினையும் அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார். ஏனைய இடங்களில் இருந்து வருகின்றவர்களுக்கான ஒரு சிறப்பான ஒரு சுற்றுலா மையமாக யாழ் மாவட்டத்தினை மாற்றுவதற்கான ஒரு தந்திரோபாய திட்டத்தினை வகுக்கும் பயிற்சி பட்டறையாக இதனை பயன்படுத்த வேண்டும் எனவும், வட மாகாணத்திற்கான ஒரு சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தினை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பயிற்சி பட்டறையின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், சுற்றுலாத்துறைக்கான 05 ஆண்டுத் திட்டங்கள் தயாரிக்கும் போது சமூகத்தின் பலதரப்பட்ட பங்குதாரர்கள் உள்ளடக்கி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று தயாரிக்க வேண்டும் எனவும், இதன் மூலமே திட்டங்கள் வினைத்திறனாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்ட திட்டங்களை மாதிரித் திட்டங்களாக தயாரித்து, மீண்டும் பொருத்தமான பங்குதாரர்களுடன் சேர்ந்து ஆராய்ந்து இறுதி செய்வதே பொருத்தமாக அமையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர கெளரவ முதல்வர், வடக்கு மாகாண சுற்றுலா பணியத்தின் தலைவர் திரு.அ. பத்திநாதன், வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளரா பேராசிரியர் திரு. நந்தகோபாலன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்மிக்க லியனகே, உள்ளூராட்சி சபைகளின் கெளரவ தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், வடமாகாண சுற்றுலா பணியத்தினுடைய பணிப்பாளர், ஏனைய திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபையினுடைய செயலாளர்கள், யாழ் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களுடைய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 45 6 8
5ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அரசாங்க அதிபருக்கும் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (15.12.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக, கிராம அலுவலர்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக, கிராம அலுவலர்களால் விரிவாக அரசாங்க அதிபருக்குதெரிவிக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட கிராம அலுவலர்கள் தமது பிரதேச செயலக ரீதியாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள், தீர்வுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பான தங்களுடைய அதிருப்தி நிலைமையினையும் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
 
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டம் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் எனவும், இவ்வாறான பல சந்தர்ப்பங்களிலும் கிராம அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிவருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடப்பெயர்வு வேளையிலும் சுனாமி, கொரோனா இடர் நிலைமை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, தற்போதைய வெள்ள அனர்த்தம் ஆகிய நிலைமைகளில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் மக்களுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றியவர்கள் எனவும், இவ் அனர்த்த சூழ்நிலையிலும் கிராம உத்தியோகத்தர்கள் சிறப்பாக சேவையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பயனாளிக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் எனவும், இதுவே அனைவரினதும் கரிசனையாகவுள்ளதாகவும், மாவட்ட ரீதியாக ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற தெளிவான விடயம் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டதாகவும், அதே போன்று ஒவ்வொரு பிரதேச செயலாளார் பிரிவின் கீழ் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இவ்வாறு ஒரே நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இதன் அடிப்படையில் பல்வேறு சிரமங்கள், துன்பங்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் துன்பப்படக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக கிராம அலுவலர்கள் இரவு பகல் பாராது மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர் என்பதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன், ஆனாலும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த அலுவலர்களையும் குறை சொல்லும் நிலை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது எனவும், அனைவரும் சரியான பயனாளிக்கு கொடுப்பனவு சென்றடைவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரால் தெளிவுபடுத்தப்பட்டது.
 
 
1 2 3 4 5
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ துரைராசா ரவிகரன் அவர்கள் இன்றைய தினம் (12.12.2025) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய பேரணி மற்றும் கோரிக்கைகளை உரிய தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டார்.
 
 
1 2 3