18சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் அகிலன் அவர்களின் தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன், வேலணை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (18.12.2025) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மக்களுக்கு உரிய சேவையை உரிய நேரத்திலே வழங்க வேண்டியது அரசாங்க உத்தியோகத்தராகிய எமது கடப்பாடு எனவும், அதிமேதகு ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக இவ் நடமாடும் சேவையை தயார்ப்படுத்திய பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், இவ் நடமாடும் சேவையானது யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக தீவுப்பகுதிகளில் நடாத்தப்பட்டு வருவதாகவும், இவ் நடமாடும் சேவையை நடாத்தும் போது மக்களின் பிரச்சினைகளை ஒரே இடத்தில் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்ததுடன், இப் பிரதேச செயலகத்தின் பல உத்தியோகத்தர்கள் யாழ் நகர்ப்பகுதிக்கு அப்பால் இருந்து தொடர்ச்சியாக பல வருடங்களாக அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் அதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
கடல் கடந்த தீவிலே இருக்கின்ற மக்கள், தங்களுடைய அரச சேவைகளை அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக, அவர்கள் பிரதேச செயலகத்தை அல்லது மாவட்ட செயலகத்தை நாடி செல்ல வேண்டிய தேவைப்பாடுகளை தவிர்க்கும் முகமாக நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட உத்தியோகத்தர்களை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அங்கே சென்று இச் சேவைகளை வழங்குகின்ற போது, சேவைகளை அவர்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் அந்த வகையில் நயினாதீவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும், கிராம மட்டத்திலே கடமையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தற்போது வெள்ள அனர்த்தம் நிலையில் தங்களுடைய பணிகளை எவ்வளவு சிறப்பாக ஆற்றினாலும், சமூகத்திலே அதற்குரிய எதிர் விமர்சனங்கள் சில கிடைக்கத்தான் செய்கின்றன எனவும், ஆதலால் கடமைகளில் மிக தெளிவாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தை பொறுத்தவரையிலே, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்குவதற்காக 365.6 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையிலே சேவைகளையும் உரிய கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்க உத்தியோகத்தர்களை நம்பி இருப்பதால், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் நிவாரணம் கொடுப்பனவுகளை மக்களுக்கு, மக்கள் நலன் சார்ந்ததாக வழங்குவதில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்களாக இருப்பதால் இவ் நிவாரண கொடுப்பனவுகள் சரியான முறையிலே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மக்களின் மனங்களில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்றதுடன் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், காணி உறுதிப்பத்திரம், கடற்றொழில் உபகரணங்கள் முதியவர்களுக்காக சக்கர நாற்காலி, தென்னங்கன்றுகள் என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வேலனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், வேலனை பிரதேச செயலாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேசத்தினுடைய சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25 26 27 28
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் கொழும்பு- பத்தரமுல்லயில் ஆரம்பிக்கப்பட்ட 1000 இளம்தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான 4ஐ (4 I project) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொண்ட இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.12.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், ஒவ்வொரு தொழில் முயற்சிகளையும் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உற்பத்தித் திறனுடன் இணைந்து மேற்கொள்ளும் போது அதன் இலாபத்தை அதிகரிக்கும் அதேவேளை தேசிய உற்பத்தியிலும் அதன் பங்கை அதிகரிக்க கூடியதாக இருக்கும் என்பதை நோக்காக கொண்டு இத் திட்டம் உருவாக்கபட்டுள்ளதாகவும், தெரிவித்தார். மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் (2025 - 2028 வரை) தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தேசிய 4 ஐ திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதற்கட்டமாக 26 நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன எனவும், இலங்கை ரீதியில் 1000 தொழில் முற்சியாளர்களை உற்பத்தி திறன் மற்றும் தொழில் வழங்குகின்ற அனைத்து அமைச்சுக்களும் இணைந்ததாக தொழில் முற்சியாளர்கள் தேசிய உற்பத்தியில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கபட்டுள்ளதாகவும் அந்த வகையிலே இந்த பயிற்சி வகுப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சிப் பட்டறையின் வளவாளர்களாக தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் 4 ஐ திட்ட வளவாளர் திரு. ஹர்ஷன அரங்கவெல்ல, 4 ஐ திட்ட நிபுணர் திரு. தர்ஷன குலதுங்க அகியோர் கலந்து கொண்டனர். இவ் விளக்கவுரை விழிப்புணர்வில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள், தேசிய உற்பத்தித் திறன் மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
6யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(16.12.2025) எழுவைதீவு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். எழுவைதீவு ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார். அத்தோடு அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில் சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இக் களவிஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் ,உதவி மாவட்டச் செயலாளர் ,உள்ளக கணக்காய்வாளர் , உதவி பிரதேச செயலாளர் ,கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 10 11 12 14 15 16 17
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.12.2025) 12.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியான காணி பயன்பாட்டு விடயங்கள் ஆராயப்பட்டு, பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், பின்வரும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
1.மாவட்ட காணி பயன்பாட்டு குழுவினால் வழங்கப்பட்ட அரச காணிகள் வழங்கப்பட்ட திகதியில் இருந்து 06 மாத காலம் தொடக்கம் ஒரு வருடம் வரையில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தால் - அக் காணிகளுக்கு அனுமதியை ரத்து செய்யுமாறும் அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.
2.காணிகள் தொடர்பாக பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக்குழுவில் அனுமதியைப் பெற்ற பின்னர் பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெற்று பின்னர் மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
3.வன வளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆளுகைக்கு உட்பட்டதும் வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
4.பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரசகாணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
5.அரச காணிகளை பொதுமக்களுக்கு அல்லது பொதுத்தேவைகளுக்காக அவசியத் தேவைக்கான காணிகளை மட்டும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கூறியதுடன், அவசியமற்ற விடயங்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறும் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாயத்ததிணைக்கள அதிகாரிகள்,நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7
 
அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதிநாள் கலை நிகழ்வு இன்றைய தினம் (16.12.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி. சிவகாமி உமாகாந்தன் அவர்களும், இரண்டாம் மொழி சிங்கள வளவாளரான திரு. வே.திருச்சபேசன் அவர்களும், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. நடராஜா உமாநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளர்களும் கெளரவிக்கப்பட்டதுடன், 100 உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 5 6 7 8 9