தேசிய மட்டத்தில் சிறந்த விவாதப்போட்டி பாடசாலையை தெரிவு செய்வதற்கான மாகாண மட்ட விவாதப்போட்டி கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. சி. சிவகெங்காதரன் தலைமையில் இன்றைய தினம் (16.05 2025) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் வழிகாட்டலில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மாணவர்ளை இணைத்து " தொழில் முயற்சியாண்மை வட்டம்" என்ற குழுவை அமைத்து பாடசாலை மட்டத்தில் தொழில் முயற்சியாண்மை் விருத்தி செய்யும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக தொழில் முயற்சியா ண்மை் தொடர்பான விவாதப் போட்டி பாடசாலைகளுக்கிடையில்
நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் மாவட்ட ரீதியான போட்டிகள் இடம்பெற்று அதில் சிறந்த பாடசாலைகள் இம்மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.
இம்மாகாண மட்ட போட்டிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 5 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2 பாடசாலைகளும், மன்னாா் மாவட்டத்திலிருந்து 3 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்திலிருந்து 2 பாடசாலைகளும் ஆக 12 பாடசாலைகள் தெிவு செய்யப்பட்டன.
இதில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், வடமாகாண கல்வி வலய உதவிப்பணிப்பாளர், வங்கி உத்தியோகத்தர், சிறந்த தொழில் முயற்சியாளர் , தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் உத்தியோகத்தர், ஆசிரியர்கள்,மாணவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.05.2025) மு.ப 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும் , மாவட்ட நிதி நிர்வாக நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதன் ஊடாக ஐய வினாக்களைத் குறைத்துக் கொள்ளலாம் எனவும் அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவாக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடைமுறை ரீதியில் சமூக நலன்கருதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சில முடிவுகளை எடுப்பதனால் சில இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள் வினைத்திறனாக செயற்படுவதாகவும் மேலும் வலுவாக செயற்படுவதன் ஊடாக
நிதி முகாமைத்துவத்தினை சிறப்பாக பேணமுடியும் என்றும் குறிப்பிட்டாா்.
இக் கூட்டத்தில் கணக்காய்வு அத்தியட்சகர் திருமதி.விஜயசிறி பிரேமதாஸ தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு.பிரபாகரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) க.ஸ்ரீ மோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்,எஸ். ரமேஸ்குமாா், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி என்.பொன்ராணி திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6
 
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12.05.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய பௌத்த மதகுரு ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ அவர்கள் கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கியபோது, புத்த பெருமான் பிறந்த, ஞானம் பெற்ற மற்றும் சமாதியடைந்த தினமே வெசாக் பௌர்ணமி தினம் எனவும், உலகத்தின் அனைத்து மக்களும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும் எனவும், பாவங்களிலிருந்து விலகியிருத்தல் வேண்டும் என்பதும் தர்ம போதனையாகும் எனவும் குறிப்பிட்டார். மேலும், உலகத்தில் உள்ள எல்லா மக்களிடையும் சாந்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் வேண்டப்படுவதாகவும், புத்த தர்மத்தில் எல்லா மக்களும் சமம் என்பதையே புத்த பெருமானின் போதனை உணர்த்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் ஆசீர்வாதம் செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.
 
1 2 3 4 5
வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் சிரமதானம், மர நடுகை மற்றும் கண் பரிசோதனை முகாம் என்பன மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.05.2025) காலை 08.45 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்டச் செயலக வளாகத்தில் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டதனைத் தொர்ந்து மர நடுகையானது பழைய பூங்விலும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அனுசரனையில் உத்தியோகத்தர்களுக்கான கண் பரிசோதனை முகாமானது மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்திலும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்
 
 
1 2 3 4
தெரிவத்தாட்சி அலுவலர் வாக்களிப்பு நிலையங்களை அவதானித்தார்.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (06.05.2025), யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேரில் சென்று அவதானித்தார்.
 
 
1 2 3 4 5 6 7 8